மஞ்சள் காமாலையின் தீவிரத்தை கண்டறிய உதவும் நிறமாற்றம் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு- 2 | jaundice attacks children – infant care 2

Share

மஞ்சள் காமாலையின் தீவிரத்தை, நிறமாற்றம் கொண்டு எவ்வாறு கண்டறிவது?

பிலிருபின் அளவு பிறந்ததிலிருந்து அதிகரிக்கத் தொடங்கி மூன்றாவது தினம் உச்சத்தைத் தொட்டு, பின் குறையத் தொடங்கும். குழந்தை பிறந்த முதல் அல்லது 2வது தினத்திலேயே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தால், மஞ்சள் காமாலை உள்ளதா என்பதை உறுதிசெய்ய 3வது அல்லது 4வது நாளில் மருத்துவரை மீண்டும் அணுகுவது முக்கியம். மஞ்சள் நிறமாற்றத்தின் அளவைக் கொண்டு, உடலில் பிலிருபினின் அளவை கணிக்க முடியும். இதனை க்ராமர் விதி (Kramer’s rule) என்றழைப்போம்.

குழந்தையை இயற்கை வெளிச்சத்திலோ அல்லது வெண்மை ஒளியின் கீழோ, அதன் உடைகளை முழுதும் நீக்கி பரிசோதிக்க வேண்டும்.

ஆள்காட்டி விரலை சில நொடிகள் குழந்தையின் சருமத்தில் அழுத்தியெடுக்கும்போது, குழந்தையின் சருமத்தில் மஞ்சள் நிறமாற்றம் ஏற்படுகிறதாவென பார்க்க வேண்டும்.

மஞ்சள் நிறமாற்றம், எலுமிச்சை மஞ்சள் நிறத்தில், முகத்தில் மட்டும் இருந்தால், பிலிருபின் அளவு 5-7 mg/dL, மார்பு மற்றும் மேல்பகுதி வரை இருந்தால் – 7-9 mg/dL, கீழ் வயிறு மற்றும் தொடைப்பகுதி வரை இருந்தால் – 9-11 mg/dL, முழங்கால் மற்றும் கைகளில் இருந்தால் – 11-13 mg/dL மற்றும் உள்ளங்கை மற்றும் பாதங்கள் வரை இருந்தால் – 13-15 mg/dL வரை ரத்தத்தில் உள்ளதென கணிக்கலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com