உலகின் உயரமான மனிதன் – தினசரி வாழ்வில் சந்திக்கும் சிக்கல்

Share

உலகின் உயரமான மனிதன்

உலகின் உயரமான மனிதராக வடக்கு கானாவை சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் உயரத்தை அளக்க போதிய வசதிகள் இல்லாததால், அவரின் சாதனையை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. உள்ளூரில் இருக்கும் மருத்துவமனையில், இவரின் உயரத்தை துல்லியமாக அளக்க உதவும் கருவிகள் இல்லாத காணப்படுகிறது.

“அளக்க டேப் இல்லை”

வடக்கு கானாவில் உள்ள ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு சமீபத்தில் வழக்கமான பரிசோதனைக்கு சென்று இருந்தார் 29 வயதான சுலைமானா அப்துல் சமத். ஆனால் இவரை இந்த வட்டாரத்தில் “அவுச்சி” என்ற பெயரிலேயே மக்கள் அழைக்கிறார்கள். மருத்துவ பரிசோதனையின் போது, இவரின் உயரம் 9 அடி 6 அங்குலம் (2.89 மீட்டர்) இருந்ததாக கண்டறியப்பட்டது. இதன் மூலம் உலகிலேயே உயரமான மனிதராக இவர் அறியப்படுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜிகாண்டிசம் என்ற நோய் தன்மையால் பாதிக்கப்பட்ட இந்த இளைஞருக்கு உயரமாக இருப்பதன் மூலம் சில சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனை நிவர்த்தி செய்ய மாதந்தோறும் சிகிச்சை மேற்கொண்டு வரும் அவுச்சியின் உயரத்தை அளக்க நீண்ட கம்பியின் அருகில் நிற்க வைக்கப்படுகிறார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com