Christmas Recipe 2022 | கிறிஸ்துமஸிற்கு சுவையான தேங்காய் ரவா கேக் செய்வது எப்படி?

Share

குளிர் காலத்தில் எதையாவது தின்று தீர்க்க வேண்டும் என்று நம் மனது துடித்துக் கொண்டிருக்கும். அதிலும், வீட்டிலேயே தின்பண்டங்களை தயாரித்து சாப்பிடுவது என்றால் அலாதி பிரியம் எல்லோருக்கும் உண்டு. அந்த வகையில் தேங்காய் ரவா கேக் உங்களுக்கான சிறப்பான தேர்வாக அமையும். மெல்லும்போது ஒட்டும் தன்மை கொண்ட தேங்காய் ரவை கேக்கில் நல்லதொரு தோற்றம் மற்றும் சுவையூட்டிகளை சேர்த்து நாம் தயார் செய்ய முடியும். இச்செய்தியில் வரும் குறிப்புகளை பின்பற்றி நீங்களே உங்கள் வீட்டில் தேங்காய் ரவா கேக் தயாரிக்கலாம்.

நன்றாக கொதித்த பாலில் சர்க்கரை, கொக்கா பவுடர் உள்ளிட்டவை சேர்த்து தயார் செய்யப்படும் ரவா கேக் நமக்கு சொர்க்கத்தில் இருப்பதை போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும். துண்டு, துண்டுகளாக சீவப்பட்ட தேங்காய் துருவலை கேக் மீது அலங்காரம் செய்தால், பார்ப்பதற்கு அதன் காட்சி இன்னும் அழகானதாக தோன்றும்.

ஒருவேளையில் தேங்காய் கேக்கின் சுவையை பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் பட்சத்தில், பாலுக்குப் பதிலாக பாதாம், முந்திரி, திராட்சை, வால்நட், சோக்கோ சிப்ஸ் போன்ற கலவையால் ஆன இனிப்புச் சுவை மிகுந்த பால் பயன்படுத்தலாம்.

உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வெள்ளை சர்க்கரைக்குப் (சீனி) பதிலாக, இயற்கையாக கிடைக்கப் பெறும் நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம் உள்ளிட்ட இதர இனிப்பூட்டிகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏதேனும் நிகழ்ச்சி கொண்டாட்டங்கள், பிறந்தநாள் விழாக்கள், ஆண்டு விழாக்கள், குழுவான சந்திப்புகள் போன்ற நிகழ்வுகளுக்காக இந்த கேக் தயார் செய்யலாம்.

ஆக, ஒவ்வொரின் மன விருப்பத்திற்கு உகந்ததாக இருக்கக் கூடிய தேங்காய் ரவை கேக் தயாரிப்பது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

தேங்காய் ரவா கேக்கிற்கு தேவையான பொருட்கள்:

ஒன்றேகால் கப் அளவுக்கு பால் எடுத்துக் கொள்ளவும். 1 கப் அளவுக்கு செமோலினா எடுத்துக் கொள்ளுங்கள். இதேபோன்று கால் கப் அளவு கோகோ பவுடர், 1 ஸ்பூன் அளவு பேக்கிங் பவுடர், 6 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் தூள், அரை கப் அளவு சர்க்கரை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Also Read : Christmas 2022 | வாழைப்பழ பாயாசம் ரெசிபி… அடுப்பே பற்றவைக்காமல் 5 நிமிடத்தில் செய்துவிடலாம்..

அதே சமயம், சுவையை கூட்டுவதற்கு அரை கப் சர்க்கரை, கால் கப் அளவு உப்பு சேர்க்காத வெண்ணெய், 1 டீ ஸ்பூன் வென்னிலா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து கொள்ளலாம். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

கேக் தயாரிப்பது எப்படி?

  • முதலில் உலர்வாக இருக்கின்ற மூலப் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலக்கிக் கொள்ளவும். இதன் பிறகு இப்பு, கொக்கோ பவுடர் ஆகியவற்றை சேர்க்கவும்.
  • இப்போது பால், வெண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் உள்ளிட்டவற்றை சேர்க்கவும்.
  • அனைத்து மூலப்பொருட்களும் ஒன்றோடு ஒன்று கலந்து, நன்றாக இறுக்கம் ஆகும் வரையில் உருட்டிக் கொள்ளவும்.
  • இந்த கலவை எடுத்து, பேக்கிங் டின்னில் வைத்து 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
  • துருவிய தேங்காயை கடாயில் சேர்த்து வறுக்க வேண்டும். அதை ஏற்கனவே உள்ள கலவையுடன் சேர்த்து கலந்து, உலர்ந்த பிறகு சின்ன, சின பீஸ்களாக வெட்டி எடுக்க வேண்டும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com