‘ராகுல் நேருவின் கொள்ளுப் பேரன்; நான் காந்தியின் கொள்ளுப் பேரன்’ – கமல்

Share

Kamal Hasan with Rahul Gandhi

பட மூலாதாரம், Makkal Needhi Maiam Twitter

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்துள்ள ‘இந்திய ஒற்றுமை’ யாத்திரையில் கலந்துகொள்ள வேண்டாம் என பலர் தனக்கு அறிவுறுத்தியதாகவும், தான் ஓர் இந்திய குடிமகனாக கலந்துகொண்டதாகவும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின் நிகழ்வில் பங்குபெற்ற கமல்ஹாசன் ஓர் அரசியல் தலைவராக இல்லாமல், ஓர் இந்திய குடிமகனாக ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்துகொண்டதாக தெரிவித்தார்.

இந்தியாவின் கொள்ளுப் பேரன்கள்

”ராகுல் காந்தி, நேருவின் கொள்ளுப் பேரன். நான் பிற இந்திய குடிமகன்களை போல காந்தியின் கொள்ளுப் பேரன். நாங்கள் இருவரும் இந்தியாவின் கொள்ளுப் பேரன்கள். நான் ஓர் அரசியல்வாதியாக இருப்பதால், இந்த யாத்திரையில் கலந்துகொள்ளவேண்டாம் என்று பலரும் எனக்கு அறிவுறுத்தினார்கள். ஆனால் கமல்ஹாசன், இந்திய தாயின் மகன் என்பதுதான் என் அடையாளம். அந்த அடையாளத்தில்தான் கலந்துகொள்கிறேன்,’’ என கமல்ஹாசன் தெரிவித்தார்.

‘வீதியில் இறங்கி போராட்டுவேன்’

பட மூலாதாரம், Bharat Jodo Twitter

தனது அரசியல் பயணம் தனக்காக தொடங்கப்பட்டதல்ல என்றும் மக்களுக்காக தொடங்கப்பட்டது என்று கூறிய கமல்ஹாசன், ”எனது தந்தையும் காங்கிரஸ் தொண்டர்தான். நான் பலவிதமான அரசியல் சித்தாந்தங்களைப் பற்றியும் அறிந்துகொண்டேன்.

பின்பு அரசியல் கட்சி தொடங்கினேன். இந்த யாத்திரையில் நான் ராகுலுடன் இணைந்து நடக்கிறேன். இது அரசியல் அடையாளம் அல்ல. இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன். தேசிய ஒற்றுமை பயணத்தில் இரண்டு கொள்ளுப் பேரன்கள் இணைந்து நடக்கிறோம் என்றுதான் இதை பார்க்கவேண்டும்,”என்றார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com