ஆபரேஷன் பிராஸ்டேக்ஸ்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டபோது என்ன நடந்தது?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்1986-ஆம் ஆண்டின் குளிர்கால நாட்கள் அவை. ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் பாகிஸ்தானை ஒட்டிய இந்தியாவின் மேற்கு எல்லை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர்.ராஜஸ்தானை நோக்கிச் செல்லும் ஒவ்வொரு சாலையிலும் ராணுவ வாகனங்களின் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இரயில்வே வேகன்கள் ஆயுதங்கள், டாங்கிகள் மற்றும் வாகனங்களை எல்லைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தன.’ஆபரேஷன் பிராஸ்டேக்ஸ்’ தொடங்கிவிட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த அளவிலான இராணுவ நடவடிக்கையை இதற்கு முன் எப்போதும் பார்த்ததில்லை.புரோபல் தாஸ்குப்தா தனது…
