செங்கோட்டையனின் கணக்கு தவறாகி போனதா? விஜயுடன் பேசியது ஏன்?
பட மூலாதாரம், FB/Sengottaiyanகட்டுரை தகவல்அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என குரல் எழுப்பிய அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தற்போது அந்தக் கட்சியிலிருந்து மொத்தமாக விலகி புதிய பாதையை தேர்வு செய்திருக்கிறார்.கடந்த செப்டம்பர் 5 அன்று, அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று பேசிய செங்கோட்டையன் அதனை செய்வதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு பத்து நாட்கள் கெடுவிதித்து ஊடகங்களில் பேசினார். மூன்று வாரங்களுக்கு முன்பு அவர் ஊடகங்களை சந்தித்த போது “அதிமுகவை ஒன்றிணைக்க…









