சீமான் – வருண்குமார் இருவர் மோதலின் தொடக்கப்புள்ளி எது? முழு பின்னணி
பட மூலாதாரம், Seeman/VarunkumarIPS/Xபடக்குறிப்பு, சீமானிடம் ரூ. 2 கோடி நஷ்டஈடு கேட்டு வருண்குமார் ஐபிஎஸ் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்1 ஜனவரி 2025புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்தன்னிடம் மன்னிப்புக் கேட்பதற்காக தொழிலதிபர் மூலமாக சீமான் தூது அனுப்பியதாக, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் திங்களன்று (டிசம்பர் 30) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.’தன்னுடைய பரம்பரைக்கே மன்னிப்புக் கேட்கும் வழக்கம் இல்லை’ என சீமான் கூறுகிறார்.தன்னை அவதூறாகப் பேசியதற்காக சீமான், 2 கோடி…