Monthly Archives: August, 2025

CSK; Ravichandran Ashwin; ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து சென்னை வீரர் அஸ்வின் ஓய்வு

அதனால், அடுத்த சீசனில் அணியை மறுசீரமைக்கவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.மேலும், சுழற்பந்துவீச்சில் நூர் அஹமது சிறப்பாகச் செயல்பட்டதால் அடுத்த சீசனில் அணியில் அஸ்வின் இருப்பாரா என்ற பேச்சுக்கள் எழுந்தது.சமீபத்தில், டெவால்ட் பிரேவிஸை அதிக தொகை கொடுத்து சி.எஸ்.கே வாங்கியது என்ற பொருள்படும் வகையில் அஸ்வின் பேசியது, அப்படி விதிமுறைகள் மீறப்படவில்லை என அணி நிர்வாகத்தை அறிக்கை வெளியிட வைத்தது.இவ்வாறான சூழலில், ஐ.பி.எல் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் இன்று அறிவித்திருக்கிறார்.இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அஸ்வின்,…

அஸ்வின்: ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததற்கு பின்னுள்ள சர்ச்சை

பட மூலாதாரம், Chennai Super Kingsபடக்குறிப்பு, அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார்.கட்டுரை தகவல்சி.எஸ்.கே அணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறப்போவதாக இன்று அறிவித்திருக்கிறார். இதனை எக்ஸ் தளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.சமீப நாட்களில் அஸ்வினுக்கும் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் இடையே பொதுவெளியில் ஏற்பட்ட சில கருத்து பரிமாற்றங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக தன்னை அணியிலிருந்து விடுவிக்குமாறு அஸ்வின் சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கேட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.சிஎஸ்கே…

”தமிழ்நாடு அணிக்காக ஆடப்போவதில்லை” – ஷாக் கொடுத்த விஜய் சங்கர்! | domestic cricket vijay shankar says will not play for Tamil Nadu team tnca

இப்போதுதான் புச்சிபாபு தொடரில் தமிழ்நாடு லெவன் அணிக்கு ஆடினார் விஜய் சங்கர். இந்த சூழலில் தமிழ்நாடு கிரிக்கெட் அணியிலிருந்து பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு அணியுடனான அவரது 13 ஆண்டுகால உறவு முடிவுக்கு வந்தது. விஜய் சங்கர், திரிபுரா அணிக்கு விளையாடப் போகிறார். 2011-12ல் தமிழ்நாடு அணியில் அறிமுகமானார். இப்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அவருக்கு ஆட்சேபனையின்மை (என்.ஓ.சி) சான்றிதழ் அளித்துள்ளது. எனவே திரிபுராவுக்கு விளையாடச் செல்கிறார் விஜய் சங்கர். புச்சி பாபு தொடரின்…

2011 CWC; sachin; dhoni; 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யுவராஜுக்கு முன்பு தோனியை இறங்கியதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது என்று சச்சின் தற்போது கூறியிருக்கிறார்.

யுவராஜ் இறங்காமல் ஏன் தோனி இறங்குகிறார் என பல கோடி இந்தியர்களும் கோபப்பட்டனர், குழம்பினர்.ஆனால், தோனியின் வின்னிங் ஷாட்டுடன் கோப்பை கைக்கு வந்ததும் அந்த கேள்விகள் எல்லாம் மறைந்துவிட்டது.அன்று முடிவு மட்டும் வேறுமாதிரியாக இருந்தால் தோனி இன்று இந்திய ரசிகர்கள் மனதில் எப்படி இருந்திருப்பார் என்று யாருக்கும் தெரியாது.இந்த நிலையில், அந்த இறுதிப் போட்டியில் யுவராஜுக்கு முன்பு தோனி இறங்கியதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது என்று சச்சின் தற்போது கூறியிருக்கிறார்.2011 ஒருநாள் உலகக் கோப்பை – சச்சின்ரெட்டிட்…

சௌதி விமான விபத்து: ‘பணியாளர்களின் தாமதமான முடிவால்’ 301 பேர் உயிரிழந்த கதை

பட மூலாதாரம், Federal Aviation Administrationபடக்குறிப்பு, சவுதி ஏர்லேன்ஸ் லாக்ஹீட் L-1011 ட்ரை ஸ்டார் விமானம் விபத்துக்குள்ளானதுகட்டுரை தகவல்சௌதி ஏர்லைன்ஸ் 163 எனும் விமானத்தின் 38 வயதான கேப்டன் முகமது அலி காய்தர், மயக்க நிலையில் இருந்ததால் காக்பிட்டில் (விமானி அறை) பாடலை முணுமுணுத்தாரா அல்லது பதற்றத்தால் அரேபிய மொழியில் பிரார்த்தனை செய்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை.ஆனால், இவரைத் தவிர காக்பிட்டில் இருந்த முதல் அதிகாரி சமி ஹாஸ்னைன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விமான பொறியாளர் ப்ராட்லி…

இந்திய அணிக்கு கோலி, ரோஹித் போல பங்களிப்பு வழங்கியவர் புஜாரா: அஸ்வின் புகழாரம் | Pujara contributed to team India like Kohli and Rohit Ashwin praises

சென்னை: இந்திய கிரிக்கெட் அணிக்கு கோலி மற்றும் ரோஹித் போலவே சிறந்த பங்களிப்பை புஜாரா வழங்கியுள்ள போதும் லைம்லைட்டுக்குள் அவர் வரவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அஸ்வின் கூறியுள்ளார். அண்மையில் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்தார். இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,195 ரன்களை புஜாரா குவித்துள்ளார். அக்மார்க் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என அவரது ஆட்டத்தை ரசிகர்கள் போற்றுவது உண்டு. தடுப்பாட்டத்தில் கைதேர்ந்தவர்.…

விநாயகர் சதுர்த்தி… பூஜை செய்ய நல்ல நேரம் முதல் பூஜை முறைகள் வரை!

விநாயகர் சதுர்த்தி அனைவரும் கொண்டாட வேண்டிய பண்டிகை. விநாயகர் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். காரணம் அவரது தோற்றம். மற்றும் அவரது எளிமை. கோயில் வேண்டும் என்று இல்லை. அரச மரத்தடியிலும் ஆலமரத்தடியிலும் கூட எழுந்தருள்வார். அவரவர் அவரவர்க்குப் பிடித்த அலங்காரங்கள் செய்யலாம். வழிபடலாம். மஞ்சளில் பிடித்துவைத்தாலும் பிள்ளையார்தான். சாணத்தில் பிடித்தாலும் பிள்ளையார்தான். எளியவர்களுக்கும் கிடைக்கும் அருகம்புல், எருக்கம்பூ மாலை என மற்றவர்கள் புறந்தள்ளும் விஷயங்களைத் தான் ஏற்றுக்கொண்டு அருள் செய்பவர். அப்படிப்பட்ட விநாயகரைக் கொண்டாடும் நாள் விநாயகர்…

dhoni; kohli; Promotion and Regulation of Online Gaming Bill; ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவால் இந்திய வீரர்கள் சுமார் ரூ.200 கோடி வரை இழக்கக்கூடும்.

எப்படியெனில், இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித், ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா ஆகியோர் ட்ரீம் 11 ஒப்பந்தத்தில் இருக்கின்றனர்.இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், சிராஜ், ஜெய்ஸ்வால், ருத்துராஜ் கெய்க்வாட், ரின்கு சிங், கங்குலி ஆகியோர் My11 சர்க்கிள் (My11 Circle) ஒப்பந்தத்தில் இருக்கின்றனர்.விராட் கோலி MPL உடனும், தோனி WinZO உடனும் ஒப்பந்தத்தில் இருக்கிறார்கள்.இந்திய அணிCricbuzz ஊடகத்தில் வெளியான தகவலின்படி, கோலியின் ஒப்பந்தம் ஆண்டுக்கு ரூ.…

விஜயகாந்தை புகழ்ந்து அவரின் வாக்குகளுக்கு குறிவைக்கிறாரா விஜய்? தேமுதிக நினைப்பது என்ன?

பட மூலாதாரம், TVKகட்டுரை தகவல்மதுரை தவெக மாநாட்டில் விஜயகாந்தை ‘அண்ணன்’ என்று குறிப்பிட்டு விஜய் புகழ்ந்து பேசியது தேமுதிக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தை அண்ணன் என்று விஜய் குறிப்பிட்டது சந்தோஷம் தந்தாலும் அரசியல் நோக்கத்தில் அவரது பெயரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.விஜய் தனது பேச்சு மூலம் விஜயகாந்தின் வாக்கு வங்கிக்கு குறிவைக்கிறாரா? இதுகுறித்த பிரேமலாதாவின் விமர்சனத்துக்கு தவெக பதில் என்ன? விஜயின் தவெகவுடன் தேமுதிக கூட்டணி…

1 3 4 5 6 7 28