அதிகாலை 2 முதல் 3 மணிக்குள் விழித்தால் ஒரு சிலருக்கு மீண்டும் தூக்கம் வராதது ஏன்?

Share

அதிகாலை 2 முதல் 3 மணிக்குள் கண் விழித்தால் ஒரு சிலருக்கு மீண்டும் தூக்கம் வராதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்
    • பதவி, பிபிசி மராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 11 நிமிடங்கள்

இரவில் வழக்கம் போல உறங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென அதிகாலை 2 அல்லது 3 மணியளவில் விழிப்பு வந்த அனுபவம் உண்டா? அப்படி விழித்த பிறகு, நீண்ட நேரம் மீண்டும் தூங்க முடியாமல் தவிப்பது இன்னும் அதிகமாக எரிச்சலூட்டும் விஷயமாக இருக்கும்.

மன அழுத்தம் காரணமாகவே இப்படி நடப்பதாகப் பலர் கருதுகிறார்கள். சிலர் இது ஏதோ தீவிர உடல்நலப் பிரச்னையின் அறிகுறியாக இருக்குமே எனக் கவலைப்படுகிறார்கள். ஆனால், நள்ளிரவில் விழிப்பு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இது எப்போதுமே தீவிர உடல்நலப் பாதிப்பின் அறிகுறியாகவே இருப்பதில்லை.

உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல தூக்கம் மிகவும் அவசியம். ஆழ்ந்த தூக்கம் போதுமான அளவுக்குக் கிடைப்பது ஒரு நாளில் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் செயல்பட உதவுவதுடன் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் மற்றும் மனநலனுக்கும் அது அவசியமானது.

இதன் காரணமாகவே, ஆரோக்கியமான தூக்கப் பழக்கத்தைப் பின்பற்றவும், போதுமான நேரம் உறங்கவும், ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெறவும் வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

அதேநேரம், தூக்கம் என்பது ஒரே சீரான, தொடர்ச்சியான நிலை அல்ல என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். இரவு முழுவதும் நம் உடல் தூக்கத்தின் பல்வேறு நிலைகளைக் கடக்கிறது. இந்த நிலைகளில் லேசான தூக்கம், ஆழ்ந்த தூக்கம், REM எனப்படும் தூக்கம் ஆகியவை அடங்கும். இந்த தூக்க சுழற்சி பொதுவாக ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒருமுறை நிகழ்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com