தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கப்படுவது ஏன்?

Share

டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதை தடுக்க தவெக அரசு என்ன செய்தது?

”பாட்டிலுக்கு 10 ரூபாய்… பாட்டிலுக்கு 10 ரூபாய்… இங்கே ஒரு மந்திரி இருந்தார். இப்போது மந்திரி மாதிரி இருக்கிறார். திமுகவுக்கு இந்த மாஜி மந்திரி என்ன செய்கிறார் தெரியுமா… இப்படி ஊழல் செய்யுற பணத்தை எல்லாம் 24×7 சப்ளை பண்ற ஏடிஎம் மெஷினாக இருக்கிறாராம். அப்படி நான் சொல்லவில்லை. ஊருக்குள் பேசிக் கொள்கிறார்கள்!”

கரூரில் கடந்த ஆண்டு செப்டெம்பர் 27ஆம் தேதி நடந்த பரப்புரை நிகழ்ச்சியின்போது, தற்போதைய முதல்வர் விஜய் பாடிய பாட்டும், பேசிய பேச்சும் இது.

அதே கூட்டத்தில் ‘இன்னும் ஆறு மாதங்களில் ஆட்சி மாறும் காட்சி மாறும்’ என்றும் அவர் பேசியிருந்தார். அப்போது அவர் கூறியது போலவே ஆட்சியும் மாறிவிட்டது. ஆனால் அவர் அப்போது முன் வைத்த ‘பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் விலை’ என்ற குற்றச்சாட்டுக்கு அவர் முதல்வரான பிறகும் தீர்வு காணப்படவில்லை என்ற புகார் கிளம்பியுள்ளது.

பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் விலை பெறப்படுவதை ஒப்புக் கொள்ளும் டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகள், அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளனர்.

இதுபற்றி பிபிசியிடம் பேசிய தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், ”பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவது குறித்த பிரச்னைக்கு விரைவில் முழுமையான தீர்வு காணப்படும்” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com