கிறிஸ்டியானோ ரொனால்டோ, கூகுள், ‘BELIEVE’ – கடைசி நாளில் சிராஜின் தாரக மந்திரம்! | Cristiano Ronaldo Google BELIEVE Siraj inspiration mantra in oval test
தனது ஆதர்சம் விராட் கோலி போலவே சிராஜும் போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிறந்த ரசிகர். எப்போதும் காலை 8 மணிக்கு எழுந்திருக்கும் சிராஜ், டெஸ்ட் போட்டியின் கடைசி நாளன்று நிலைகொள்ளா மன நிலையில் 6 மணிக்கெல்லாம் எழுந்து விட்டதாக பேட்டியில் கூறியுள்ளார். முதல் நாள் ஹாரி புரூக் அடித்த ஷாட்டை பவுண்டரியில் கேட்ச் பிடித்து விட்டு, தெரியாமல் பவுண்டரிக்குள் விழுந்து விட்ட சிராஜினால்தான் ஆட்டம் 5-ம் நாளுக்கு வந்தது, இல்லையெனில் இவரே 4-ம் நாளிலேயே…









