Monthly Archives: August, 2025

பாபர் அசாம், ரிஸ்வானுக்கு மேலும் அடி: மைய ஒப்பந்தத்தில் கீழிறக்கம்! | Babar Azam, Rizwan get another blow – Downgrade in central contract

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்கள் ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது, அதில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் தங்களின் முந்தைய உயர் நிலையிலிருந்து கீழே இறக்கப்பட்டுள்ளனர். ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான அணியிலிருந்து பாபர் அசாம், ரிஸ்வான் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இவர்கள் நிலை ஏ-யிலிருந்து பி-நிலைக்கு இறக்கப்பட்டுள்ளது. இந்த முறை பிரிவு-ஏ என்ற வகையே இல்லாமல் செய்து விட்டது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். பாபர் அசாம், ரிஸ்வான் இருவரும் கடந்த வருட வீரர்கள் ஒப்பந்தத்தில்…

மும்பையில் நான்கு நாள்களாக தொடர்ந்து கனமழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் நான்கு நாள்கள் தொடரும் மழை மும்பையில் கடந்த நான்கு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை மும்பையில் 170 மிமீ அளவுக்கு மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விக்ரோலியில் அதிக பட்சமாக 194 மி.மீ அளவுக்கு மழை பெய்தது. மும்பை வடாலா பகுதியில் மழையின் போது டாக்சிக்காக காத்திருந்த தாய், மகன் மீது மாநகராட்சி பஸ்…

Kholi: Rohit: “2027 உலகக்கோப்பை வரை நடைபெறும் ODI கேப்டனாக ரோஹித் தொடர வேண்டும்.”- Ambati rayudu

2027 உலகக்கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான திட்டத்தில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது. விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். தற்போது அவர்கள் ஒருநாள் கிரிக்கெட் (ODI) மட்டுமே விளையாடுகின்றனர். ரோஹித் ஷர்மா ஒருநாள் அணியின் கேப்டனாகவும், விராட் கோலி முக்கிய வீரராகவும் அணியில் தொடர்கிறார்கள். ரோஹித் ஷர்மா இதனிடையே மூத்த வீரர்களான விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து…

அமெரிக்கா, ரஷ்யா, யுக்ரேன், ஐரோப்பா : பேச்சுவார்த்தையில் 4 தரப்புகளின் எதிர்பார்ப்புகள் என்ன?

பட மூலாதாரம், AFP via Getty Imagesகட்டுரை தகவல்யுக்ரேன் தொடர்பாக முக்கியமான பேச்சுவார்த்தைக்காக வெள்ளை மாளிகையில் உலகத் தலைவர்கள் அரிதாக ஒன்றுகூடும்போது நிச்சயம் அது வழக்கமான நாளாக இருக்காது.ஆரம்பத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கிக்கு இடையேயான சந்திப்பாக அறிவிக்கப்பட்டது, தற்போது ஒரு மாநாடு போன்று மாறியுள்ளது.பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பின்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ தலைவர்கள், மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவுடன் நீடித்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது…

‘லார்ட்ஸ் வெற்றி என்றென்றும் என் நினைவில் இருக்கும்’ – ஷோயப் பஷீர் பகிர்வு! | Lords thrill win will be remembered forever shoaib Bashir on Siraj wicket

லண்டன்: இந்திய அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 22 ரன்களில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்ற போது ஏற்பட்ட மகிழ்ச்சியான உணர்வு தனக்குள் என்றென்றும் நிலைத்திருக்கும் என இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீர் பகிர்ந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 10 முதல் 14-ம் தேதி வரையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தன. இந்தப் போட்டியில் 5-ம் நாளான்று இங்கிலாந்து அணி 22 ரன்களில்…

29Cயை ஏக்கத்துடன் எட்டிப் பார்க்கிறேன்! – சென்னை பெண்ணின் நெகிழ்ச்சி நினைவலை | #ChennaiDays | My Vikatan author shares about childhood days in chennai

இப்படியாக ஒவ்வொருவராய் அமர்த்தி  இறுதியாக கிடைத்த ஸீட்டில் நான் அமர, என் மடியில் கார்த்து. அப்படி ஒரு எதிர்காற்றை எங்கள் இருவரின் முகமும் அனுபவிக்கும் அடுத்த நொடியே, “வ்ஷ்ஷ்ஷ்”, எனக் கேட்டுவிடும் விசில் சத்தம்! “லஸ் லாம்  இறங்குங்க…”, என்பார் கண்டக்டர். “இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தா என்ன? என்ன அவசரம், ஏன் அவசரம் ஏ,   பெண்ணே!”, என்று  கார்த்துவின் மனதில் ஓடியிருக்கக்கூடிய பாடலை பாஸ் செய்துவிட்டு, பள்ளி வாகனத்திலிருந்து இறக்கப்படும் குழந்தைகள் போல அனைவரையும்…

திண்டுக்கல்: 31-வது செவிலியர் மாணவர் சங்க மாநாடு; விளையாட்டுப் போட்டிகளுடன் கோலாகலம்

திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் 31-வது செவிலியர் மாணவர் சங்க மாநாடு ஆகஸ்ட் 14, 15, 16 ஆகிய மூன்று தினங்கள் விளையாட்டுப் போட்டிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.Published:Today at 12 AMUpdated:Today at 12 AM நன்றி

நேரலை: டிரம்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி – பேச்சுவார்த்தையில் நடப்பது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ், யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி (கோப்புப்படம்) 18 ஆகஸ்ட் 2025, 13:14 GMTபுதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்க அதிபர் டிரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்த நிலையில், இன்று டிரம்ப், யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்கவுள்ளார். டிரம்ப்-புதின் சந்திப்பில் கிட்டத்தட்ட மூன்று மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகும், ரஷ்யா-யுக்ரேன் போரை நிறுத்துவது குறித்து ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.இந்நிலையில், டிரம்புடனான சந்திப்புக்காக…

மிடில் ஓவர்களில் பிரமாதமாக ஆடுவது ஸ்ரேயஸ் அய்யர்தான் – ஆகாஷ் சோப்ரா | Shreyas Iyer is playing brilliantly in the middle overs – Akash Chopra

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கடந்த ஐபிஎல் சீசனில் மிக அருமையாக ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் இந்திய டி20 அணியில் மீண்டும் அழைக்கப்பட தகுதியானவரே என்று முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நாளை, செவ்வாய்க் கிழமை ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் நிலையில் ஸ்ரேயஸ் அய்யர் மீண்டும் அணிக்குள் வர வேண்டும் என்று விரும்புகிறார் ஆகாஷ் சோப்ரா. மேலும் ரிக்கி பாண்டிங் பயிற்சியின் கீழ் ஓர் அற்புதமான கேப்டனாகவும் அய்யர் உருவெடுத்துள்ளார்.…

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்: `தரமற்ற உணவு’ மாணவ மாணவிகள் குற்றச்சாட்டு

ஒரு நாள் இதை தட்டோட ஹாஸ்டல் வார்டன் சார்கிட்ட காட்டினேன். `நீ போய் வேற ஃபுட் வாங்கி போட்டுக்க’ என்று அலட்சியமாக பதில் கூறினார். உணவில் ஏதும் குறைபாடு இருந்தால் ஃபீட்பேக் எழுத சொல்லி யுனிவர்சிட்டி அட்மினிஸ்ட்ரேஷன் நோட்டிபிகேஷன் அனுப்பினாலும் மேற்கொண்டு எந்த ரெஸ்பான்ஸும் இருக்காது. இந்த பிரச்னை யுனிவர்சிட்டிக்கு தெரியும் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரையிலும் எடுக்கவில்லை. ஹாஸ்டலும் சரியாக மெயின்டைன் பண்ணாம மேலிருந்து இடிஞ்சு கொட்டுது” என்று அந்த மாணவர் கூறினார்.அருகில் உள்ள…

1 11 12 13 14 15 28