Monthly Archives: July, 2025

குழித்துறை: நைட்டி அணிந்து பொருட்காட்சியில் ஆட்டம்; வில்லங்க செயலால் போலீஸில் சிக்கிய இளைஞர்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மைதானத்தில் குழித்துறை நகராட்சி சார்பில் நடத்தப்படும் வாவுபலி பொருட்காட்சி இந்த முறை 100-வது ஆண்டாக நடைபெற்றுவருகிறது. கடந்த 9-ம் தேதி தொடங்கிய இந்த பொருட்காட்சியில் விவசாயிகள் விளைவித்த பொருட்களின் கண்காட்சி, செடி மற்றும் மரக்கன்றுகள் கண்காட்சி மற்றும் விற்பனை, மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் திறமையை வெளிப்படுத்தும் கலைத்திறன் படைப்புகளின்…

Praggnanandhaa: நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா; காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்!

கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான பிரீ ஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4-வது சுற்றில் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் 39 நகர்வுகளில் பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் 4.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா முதலிடத்தில் உள்ளார். Praggnanandhaaமேலும் அவர் ஃப்ரீஸ்டைல் செஸ்…

உலக எமோஜி தினம்: மக்கள் அதிகம் பயன்படுத்திய எமோஜி எது தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images12 நிமிடங்களுக்கு முன்னர்மகிழ்ச்சி, துக்கம், நையாண்டி என அனைத்து வகை உணர்வுகளையும், ‘சாட்டில்’ வெளிப்படுத்த நீங்கள் தினமும் எமோஜிக்களை பயன்படுத்துகிறீர்கள். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் எமோஜிக்கள் தினம் கொண்டாடப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஜூலை 17, அதாவது இன்றுதான், உலக எமோஜி தினம். இந்த தினம் ஏன் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டது என்று தெரியுமா? நீங்கள் உங்கள் ஃபோன்களில் பார்க்கும் நாட்காட்டியை குறிக்கும் எமோஜியில் காட்டப்படும் தேதி ஜூலை 17. அதனால்தான் இந்த…

“பும்ரா அடுத்த 2 போட்டிகளிலும் விளையாட வேண்டும்” – அனில் கும்ப்ளே | ENG vs IND | team india bowler Bumrah should play in next two matches Anil Kumble

சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ளார். ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. அண்மையில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 22 ரன்களில் இந்தியா தோல்வி…

தரவரிசையில் ஜோ ரூட் மீண்டும் முதலிடம்! | icc test cricket batsmen ranking joe root back to top

துபாய்: ஐசிசி கிரிக்கெட் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்தது. பரபரப்பான இந்த போட்டியில் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசினார். மேலும், 2-வது இன்னிங்ஸிலும் 40 ரன்கள் சேர்த்தார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்…

நச்சுப் பாம்புகளை எளிதில் அடையாளம் காண்பது எப்படி? உதவும் புதிய கையேடு

பட மூலாதாரம், RAMESHWARANபடக்குறிப்பு, பூனைக்கண் பாம்புகட்டுரை தகவல்கொம்பேறி மூக்கன் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது, அதுகுறித்த மூடநம்பிக்கை நிறைந்த தவறான தகவல்களே. நஞ்சற்ற, மரத்தில் வாழக்கூடிய இந்தப் பாம்பு இனம், “மிகவும் ஆபத்தான நஞ்சுள்ள பாம்பு” என்ற தவறான புரிதல் பலருக்கும் உள்ளது.இப்படியாக நஞ்சற்ற பல பாம்புகள் குறித்து மக்களிடையே இருக்கும் தவறான புரிதலைப் போக்க உதவுகிறது “தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் பாம்புகள்” என்ற புதிய கையேடு.பாம்புகள், இயற்கைச் சமநிலையின் முக்கியமான ஓர் அங்கம். இருந்தாலும், அவற்றைப்…

லார்ட்ஸ் போட்டியில் ரிஷப் பந்த், கருண் நாயர் ஆட்டமிழந்தபோதே இங்கிலாந்தின் வெற்றி உறுதியாகிவிட்டது: ரவி சாஸ்திரி | England victory assured when Rishabh Pant Karun Nair out at Lords Ravi Shastri

லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் ரிஷப் பந்த், கருண் நாயர் ஆட்டமிழந்த போதே இங்கிலாந்தின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தெரிவித்தார். இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹெட்டிங்லியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி…

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: ”கனவாக இருக்கக் கூடாதா..?”- கதறித் துடிக்கும் பெற்றோர்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் உலகையே உலுக்கியது. புத்தகப்பையுடன் முகம் சிரித்தபடி படிக்கச் சென்ற குழந்தைகள் கருகிய நிலையில் மீட்கப்பட்டதை கண்ட பெற்றோர் கதறி துடித்தனர்.கும்பகோணம் பள்ளி தீ விபத்து 21ம் ஆண்டு நினைவு நாள்இந்த சம்பவம் நடந்து 21…

Virat Kohli: "அவர் மீண்டும் டெஸ்ட் விளையாட வர வேண்டும்…" – முன்னாள் வீரர் மதன் லால் அழைப்பு

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவிய நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி ஓய்வைத் திரும்பப்பெற்றுவிட்டு களத்துக்குத் திரும்ப வேண்டுமென குரல் கொடுத்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் மதன் லால். Madan Lal விராட் கோலி கடந்த மே மாதம் நீண்ட கிரிக்கெட் வகைமையான டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பலருக்கும் அதிர்ச்சியளித்த அந்த முடிவிலிருந்து பின்வாங்குவது ஒன்றும் கடினமான காரியமில்லை எனக் கூறியுள்ள மதன் லால், கோலி அவரது…

1 13 14 15 16 17 31