ஆர்சிபி கோப்பை கனவு நிறைவேற்றத்தின் ‘அன் சங் ஹீரோ’ கிருணல் பாண்டியா! | Krunal Pandya is the unsung hero of RCB trophy dream
ஆர்சிபியின் 18 ஆண்டு கால கோப்பைத் தவம் வெற்றியுடன் நிறைவேறியது. விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஐபிஎல் கோப்பை வெல்லாதது ஒரு பெரிய கறையாக இருந்து வந்தது நேற்று நீக்கப்பட்டது. ஆர்சிபி வெற்றியில் பலரும் பங்களித்திருக்கலாம். ஆனால் கிருணல் பாண்டியாவின் பங்களிப்பு அதிகம் பேசப்படுவதில்லை. ஆனால், அவர்தான் ‘அன் சங் ஹீரோ’ என்பார்களே அந்த எதிர்மறைப் பெருமையில் மிளிர்கிறார். 15 போட்டிகளில் 17 விக்கெட்டுகளுடன் ஐபிஎல் 2025 பவுலர்கள் பட்டியலில் 10-ம் இடத்தில் திகழ்கிறார் கிருணல். டாப்…