இஸ்ரேல் இரானை வீழ்த்தினால் இந்தியாவை அது எப்படி பாதிக்கும்?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு வரை, அதாவது 1947 ஆகஸ்ட் வரை, இந்தியாவும் இரானும் 905 கி.மீ நீள எல்லைப் பகுதியை பகிர்ந்து கொண்டிருந்தன. பிரிவினைக்குப் பிறகு அந்த எல்லை பாகிஸ்தானுடனான எல்லையாக இருக்கிறது. இந்தியாவுக்கும் இரானுக்கும் இடையேயான உறவு, மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடு போன்றவற்றில் மிகவும் ஆழமானதாக உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இவ்விரு நாடுகளுக்குமான ரஜ்ஜீய ரீதியிலான உறவு 1950 மார்ச் 15-ல் ஆரம்பமானது.…