Yashaswi Jaiswal : 'ஒரு நாயகன் உதயமாகிறான்!' – லீட்ஸில் எப்படி சதமடித்தார் ஜெய்ஸ்வால்?
‘ஜெய்ஸ்வால் சதம்…’இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாளிலேயே சதமடித்திருக்கிறார் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். அசத்தலான இன்னிங்ஸ்! தனது முதல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியிலேயே பெர்த்தில் சதமடித்திருப்பார். இப்போது தனது முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் முதல் இன்னிங்ஸிலேயே லீட்ஸில் சதமடித்திருக்கிறார். ஜெய்ஸ்வால்இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் ஜெய்ஸ்வாலைப் பற்றி, ‘இவர்தான் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார்!’ என வர்ணித்திருந்தார். அந்தப் பாராட்டுக்கு தகுதியான இன்னிங்ஸை ஜெய்ஸ்வால் ஆடியிருக்கிறார். ரோஹித்…