பிரபல ரௌடி அசோக்கைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்.. செங்கல்பட்டு வனப்பகுதியில் நடந்ததென்ன?
செங்கல்பட்டு அருகே உள்ள திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (30). இவர் ஏ பிளஸ் ரௌடி. சிறையிலிருந்து வெளியில் வந்த அசோக்கை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அசோக் தலைமையிலான ரௌடி டீம், தி.மு.க பிரமுகர் ஒருவரைக் கொலை செய்ய திட்டமிட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதோடு கஞ்சா விற்பனையிலும் அதிகளவில் ஈடுபட்டு வந்தார். அதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அசோக்கை கைது செய்ய போலீஸார் அவரைத் தேடிவந்தனர். அப்போது அவர் சிங்கபெருமாள் கோயில் அருகே ஆப்பூர்…









