Monthly Archives: March, 2025

தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ரூ சேர்க்கப்பட்டது விவாதமாவது ஏன்?

பட மூலாதாரம், mkstalin2 மணி நேரங்களுக்கு முன்னர்2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், நிதிநிலை அறிக்கை குறித்த முன்னோட்ட காணொளியை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (மார்ச் 13) வெளியிட்டார். அதில் இருந்த ஒரு படம், நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கை முன்னோட்ட காணொளியை வெளியிட்டுள்ளார்.இந்த காணொளியில் நிதிநிலை…

“என் கனவு நிஜமாகி விட்டது” – தோனி உடனான சந்திப்பு குறித்து சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சிப் பகிர்வு! | Sanju Samson Recalls Ice-Breaking Moment With MS Dhoni

ஜாஸ் பட்லரின் வெளியேற்றம், தோனி உடனான உறவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் பகிர்ந்துள்ளார். ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: “ஐபிஎல் ஒரு அணியை வழிநடத்துவதற்கும், மிக உயர்ந்த தரத்தில் விளையாடுவதற்கும் வாய்ப்பு தருகிறது. அதேசமயம், பல நெருங்கிய நட்புகளையும் உருவாக்க உதவுகிறது. ஜாஸ் பட்லர் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் ஒருவர். நாங்கள் ஏழு ஆண்டுகள் சேர்ந்து விளையாடியுள்ளோம். ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக இருந்தோம்.…

Tushar Gandhi: காந்தியின் பேரனை மறித்து கோஷம்; ஆர்எஸ்எஸ்-பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு; நடந்தது என்ன?

மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெய்யாற்றின்கரையில் காந்தியவாதி கோபிநாதன் நாயரின் சிலை திறப்புவிழா நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய துஷார் காந்தி, “ஆர்.எஸ்.எஸும், சங்பரிவார் அமைப்புகளும் நம் தேசத்தின் ஆன்மாவில் விஷத்தைக் கலந்துள்ளன. நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” எனப் பேசினார். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு காரில் ஏறிப் புறப்படத் தயாரானார் துஷார் காந்தி. அப்போது அவரது காரை மறித்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க…

KL Rahul: விராட் கோலியின் 9 வருட சாதனை முறியடிப்பு… முதலிடத்துக்கு முன்னேறிய கே.எல்.ராகுல்!

இந்திய அணி 2025-ஐ பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தோல்வியுடன் தொடங்கினாலும், உடனடியாக அதிலிருந்து மீண்டெழுந்து தற்போது ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி கைப்பற்றி அசத்தியிருக்கிறது. அதுவும் ஒரு சில வீரரின் செயல்பாட்டால் என்றில்லாமல், ஆடிய அனைத்து வீரர்களின் பங்களிப்புகளால் இந்தியா சாம்பியனாகியிருக்கிறது. இதில், சைலன்ட்டாக சம்பவம் செய்ததென்றால் அது கே.எல்.ராகுல்தான்.கே.எல்.ராகுல்கே.எல்.ராகுல்காரணம், சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முந்தைய இங்கிலாந்துக்கெதிரான தொடரில் பேட்டிங்கில் அக்சர் படேலை இவருக்கு முன்பாக இறக்கி, ஆறாவது, ஏழாவது இடத்தில் இவர் களமிறக்கப்பட்டார். அணியின் இந்த முடிவு…

இந்தோனீசியாவில் உள்ள இந்தக் குகை மெக்காவுக்கு செல்லும் ரகசிய சுரங்கப் பாதையா?

காணொளிக் குறிப்பு, இந்தோனீசியாவில் உள்ள இந்தக் குகை மெக்காவுக்கு செல்லும் ரகசிய சுரங்கப் பாதையா?54 நிமிடங்களுக்கு முன்னர்இந்த மறைவான பாதை மூலம் மெக்கா செல்லும் நம்பிக்கையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் இந்தக் குகைக்கு வருகின்றனர்.தெய்வீக சக்தியால் ஷேக் அப்துல் முஹ்யி போன்ற புனிதர்கள் இந்த வழியே மெக்கா சென்றதாக இஸ்லாமிய ஞானிகள் கூறுகின்றனர். அவர், 17ஆம் நூற்றாண்டில் மேற்கு ஜாவாவில் இஸ்லாமை பரப்பிய அறிஞராவார்.இந்தக் கற்களில் தலை பொருந்தினால் நீங்கள் ஹஜ் செல்லலாம் என மற்றொரு ஞானி கூறுகிறார்.இங்கு…

கேகேஆர் கேப்டனாக தேர்ச்சி பெறுவாரா அஜிங்க்ய ரஹானே? – ஐபிஎல் அணி அலசல் | Will Ajinkya Rahane succeed as KKR captain

நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி புதிய கேப்டனான அஜிங்க்ய ரஹானே தலைமையில் கோப்பையை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. 3 முறை சாம்பியனான அந்த அணி தொடரின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 22-ம் தேதி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்திக்கிறது. கடந்த ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ஸ்ரேயஸ் ஐயர் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறி உள்ளதால் அனுபவம் வாய்ந்த அஜிங்க்ய ரஹானே…

Rabies : 50 நாளில் 77,540 நாய்க்கடி சம்பவங்கள்; 3 ரேபிஸ் மரணங்கள் – என்னதான் தீர்வு? | In-Depth| What are the prevention for Dog Bite?

நாய்க்கடியில் சிம்பிள் நாய்க்கடி. அதாவது, பல் பதிந்திருக்கும். ஆனால், ரத்தம் வராது. இவர்களுக்கு டிடி இன்ஜெக்‌ஷன் போடுவோம். இதனுடன் இம்யூனோகுளோபுலின் ஊசி(நாய்க்கடிக்கான ஊசி)யும் போடுவோம். இந்த ஊசியை நாய் கடித்தவுடன் ஓர் ஊசி, பிறகு கடித்ததிலிருந்து நான்காவது நாள், எட்டாவது நாள், பதினான்காவது நாள், 28-வது நாள் போடுவோம். கடித்தது வீட்டு நாய், அது தடுப்பூசியெல்லாம் போடப்பட்டு நோய் எதிர்ப்புச்சக்தியுடன் இருக்கிறது என்றால், 3 டோஸ் ஊசிப் போட்டாலே போதும். இதுவே தெரு நாய் என்றால், அது…

`ரூ.1,200 கோடி முறைகேடு; எலும்புகள் வைத்து பில்லி சூனியம்’- மும்பை மருத்துவமனையில் அதிர்ச்சி புகார்! | Lilavati Hospital Ex-Trustees accused of siphoning Rs 1200 crore, Practicing Black magic

மும்பை பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனை மிகவும் பிரபலம் ஆகும். சமீபத்தில் நடிகர் சைஃப் அலிகான் அவரது வீட்டில் திருடனால் தாக்கப்பட்டபோது இந்த மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுத்துக்கொண்டார். தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படும் இம்மருத்துவமனையில் ரூ.1200 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்திய கோர்ட் தீர்ப்பையடுத்து ஏற்கெனவே இருந்த அறங்காவலர்கள் நீக்கப்பட்டு புதிய அறங்காவலர்கள் மருத்துவனையின் பொறுப்பை ஏற்றுள்ளனர். அவர்கள் பொறுப்பை ஏற்றவுடன் நிதி நிலையை ஆய்வு செய்தபோது மருத்துவமனையில் நிதி மோசடியில்…

Pakistan: “தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யு-வில் இருக்கிறது” – விமர்சிக்கும் அப்ரிடி | shahid afridi says pakistan cricket in ICU by their wrong decisions

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் லீக் சுற்றுலியே வெளியேறியது அந்நாட்டு முன்னாள் வீரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இப்போது, அடுத்ததாக நியூசிலாந்துக்கெதிரான தொடருக்கு பாகிஸ்தான் அணி தயாராகி வருகிறது. இதில், டி20 தொடரில் முகமது ரிஸ்வான், பாபர் அசாம் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு சல்மான் அகாவை கேப்டனாகவும், சதாப் கானை திடீரென அணிக்குள் சேர்த்து துணைக் கேப்டனாகவும் நியமித்திருக்கிறார்கள்.பாகிஸ்தான் அணிஇவ்வாறிருக்க, திடீரென சதாப் கானை சேர்த்து, துணைக் கேப்டனாக நியமித்ததற்கெதிராக கேள்வியெழுப்பியிருக்கும் முன்னாள் கேப்டன்…

தமிழ்நாடு அரசு பிஎம் ஸ்ரீ பள்ளிகளை முதலில் ஏற்றுவிட்டு பின்னர் நிராகரித்ததா? முழு பின்னணி

பட மூலாதாரம், Getty Images12 மார்ச் 2025, 11:36 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை பெற, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு தேசிய அரசியலில் பெரும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் வடிவமைக்கப்படும் பி.எம்.ஶ்ரீ மாதிரிப் பள்ளிகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு மறுக்கிறது. பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்காததால் சமக்ரா சிக்‌ஷா…

1 17 18 19 20 21 32