Hardik: “நிதி நெருக்கடி… நூடூல்ஸ்தான் சாப்பாடு…” – ஹர்திக் பாண்டியா குறித்து நீடா அம்பானி | Nita Ambani recalled the journey of Hardik Pandya
இந்தியக் கிரிக்கெட் அணியில் கவனிக்கத்தக்க இடத்தைத் தக்கவைத்திருப்பவர் ஹர்திக் பாண்டியா. இவரின் ஆரம்பக்கால வாழ்க்கை குறித்தும், அவரின் கிரிக்கெட் ஆர்வம் குறித்து, மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் உரிமையாளர் நிதா அம்பானி ஒரு நிகழ்வில் பகிர்ந்துகொண்டார். அவரின் உரையில், “எங்கள் ஸ்கவுட் அமைப்பு எப்படி திறமையானவர்களை அடையாளம் காண்கிறது என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வைச் சொல்ல வேண்டும். நானும் என்னுடைய குழுவும் ஒவ்வொரு ரஞ்சி டிராபி போட்டிக்கும் செல்வோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் எங்கள்…









