ஷேக் ஹசீனா: இந்தியா – வங்கதேசம் இரு நாடுகளிடையே மீண்டும் வார்த்தைப் போர் தொடங்குமா?

Share

இந்தியா, வங்கதேசம், ஷேக் ஹசீனா, முகமது யூனுஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷேக் ஹசீனா கருத்துகள் தெரிவிக்காமல் இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என முகமது யூனுஸ் கூறியுள்ளார்

இந்தியா – வங்கதேசம் இடையே ஏற்ற இறக்கங்கள் நிறைந்த உறவில் ஷேக் ஹசீனா விவகாரம் தொடர்ந்து ஒரு முக்கிய பிரச்னையாக நீடித்து வருகிறது. அவர் வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி வந்தார். அப்போது முதல் அவர் இந்தியாவிலேயே இருக்கிறார்.

இந்தியாவில் தங்கியிருக்கும் ஷேக் ஹசீனா தொடர்ச்சியாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இதற்கு வங்கதேசத்தில் இருக்கும் இடைக்கால அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேச அரசு இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளது.

இருப்பினும், இப்போது அவர் தெரிவித்துள்ள ஒரு புதிய கருத்துக்குப் பிறகு, இரு நாடுகளுக்கிடையில் வார்த்தைப் போர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேச இடைக்கால அரசு குறித்தும் அதன் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் குறித்தும் ஷேக் ஹசீனா கடுமையான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு வங்கதேச இடைக்கால அரசும் எதிர்வினையாற்றியுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com