பல்லாவரம்: திடீர் வயிற்றுப்போக்கால் நிலைகுலைந்த மக்கள், இருவர் மரணம் – குடிநீரில் கழிவுநீர் கலந்ததே காரணமா?
கட்டுரை தகவல்சென்னை பல்லாவரத்தில் திடீர் வயிற்றுப்போக்கு ஒரு தெருவையே நிலைகுலைய வைத்துள்ளது. இதன் பாதிப்பால், இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 23 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.மீன் உணவு சாப்பிட்டதே இறப்புக்குக் காரணம் எனக் கூறுகிறார், அமைச்சர் தா.மோ.அன்பரசன்.ஆனால், மாநகராட்சி குடிநீரில் கழிவுநீர் கலந்ததே இறப்புக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். உண்மை நிலையை அறிய ஆய்வக முடிவுக்கு காத்திருப்பதாகக் கூறுகிறார், அமைச்சர் மா.சுப்ரமணியன்.சென்னை பல்லாவரத்தில் உள்ள மலைமேடு, மாரியம்மன் கோவில் ஆகிய…









