CSK: ‘தோனி நிச்சயம்; சிஎஸ்கே தக்கவைக்கப் போகும் மற்ற வீரர்கள் யார் யார்? – ஓர் அலசல் | CSK retained players prediction for upcoming ipl
ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை தக்கவைக்கவும் ஏலத்தில் வாங்கவும் 120 கோடி ரூபாயை பிசிசிஐ நிர்ணயித்திருக்கிறது. பிசிசிஐ சொல்வது போல 6 வீரர்களையும் ஒரு அணி முழுமையாக தக்கவைக்கும்பட்சத்தில் 79 கோடி ரூபாயை ஏலத்துக்கு முன்பாகவே ஒரு அணி செலவளித்துவிடும். எனில், ஏலத்தில் வீரர்களை எடுக்க கையில் 41 கோடி ரூபாய் மட்டும்தான் இருக்கும். இந்த 41 கோடி ரூபாயை வைத்துக் கொண்டு ஏறக்குறைய 19 வீரர்களை அணியில் எடுப்பதென்பது அணிகளுக்கு தலைவலியாக மாறிவிடும். இதனால் பெரும்பாலான அணிகள்…