‘கோலியை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்’ – பாபர் அஸமை சாடிய யூனிஸ் கான் | Learn from Kohli Younis Khan slams Babar Azam
லாகூர்: டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார் பாகிஸ்தான் அணியின் பாபர் அஸம். இந்நிலையில், பேட்டிங் விஷயத்தில் பாபர் அஸம் கவனம் வைக்க வேண்டும், விராட் கோலியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். “பாபர் அஸமுக்கு சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. மிக இளம் வயதில் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார். அடுத்ததாக தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் அவரது கவனம் இருக்க வேண்டும். கேப்டன்சி…









