‘கேப்டன் கூல்’ தோனி டென்ஷனில் கொதித்த தருணம் – பத்ரிநாத் பகிர்வு | Badrinath shared dhoni angry moments
பொதுவாக தோனி என்றாலே கூல், நிதானம் என்றெல்லாம் கூறப்படுவதுண்டு, ஆனால், அவருக்கு நெருங்கிய வட்டங்களில் உள்ளவர்களுக்கே தெரியும், பார்ட்டி எவ்வளவு பெரிய டென்ஷன் பார்ட்டி என்பது. அப்படிப்பட்டத் தருணைத்தான் தமிழ்நாடு வீரர் தற்போதைய வர்ணனையாளர் எஸ்.பத்ரிநாத் பகிர்ந்துள்ளார். இன்சைடு ஸ்போர்ட்டில் பத்ரிநாத் கூறியது: “அவரும் மனிதர்தான்… தன் நிதானத்தை இழந்தார் தோனி. ஆனால், களத்தில் இவ்வாறு தோனி நிதானத்தை இழக்க மாட்டார், எதிரணியினர் தோனி டென்ஷன் ஆகிவிட்டார் என்று தெரியக் கூடாது என்று நினைப்பார். இந்தச் சந்தர்ப்பத்தில்…









