ஹசன் நஸ்ரல்லா மரணம்: சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன? சிரியா மக்கள் கொண்டாடுவது ஏன்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நஸ்ரல்லா கொல்லப்பட்டதை அறிந்து கதறி அழும் பெண் 2 மணி நேரங்களுக்கு முன்னர்சனிக்கிழமையன்று இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தது உலகம் முழுவதும் பேசுபொருளானது. சர்வதேச ஊடகங்களின் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் இதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து ‘தி நியூயார்க் டைம்ஸ்’ விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது. நஸ்ரல்லாவின் மரணம் மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதலை புதிய கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாக…