Yearly Archives: 2023

‘இன்னும் 26 சதங்களை விராட் கோலி அடிப்பார்…’ – சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

விராட் கோலி இன்னும் 26 சதங்களை அடிப்பார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அனைத்து ஃபார்மேட் போட்டிகளிலும் விராட் கோலி 74 சதங்களை விளாசியுள்ள நிலையில் அவர் நிச்சயமாக மொத்தம் 100 சதங்களை அடிப்பார் என்று கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- விராட் கோலிக்கு 34 வயது ஆகிறது. ஒருவேளை இன்னும் அவர் 5,6 ஆண்டுகள் விளையாடினால் நிச்சயமாக ஒட்டுமொத்தமாக 100 சதங்களை கடந்து விடுவார்.விராட் கோலி…

சப்பாத்திக்கு ஏற்ற செம்ம சைட் டிஷ்… இனிமேல் இதை டிரை பண்ணி பாருங்க…

chapati Kuruma | சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த வெஜிடபிள் வெள்ளை குருமா சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை தெரிந்துக் கொள்ளலாம். நன்றி

திமுக தலைவராக போட்டியின்றி தேர்வானார் மு.க.ஸ்டாலின்!

திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், தலைவர் பதவிக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகினர். இதனால் இரண்டாம் முறையாக மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராகிறார்.திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. அதன்படி காலை 10 மணி முதல் மாலை 5 வரை நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் மூன்று பேரையும் எதிர்த்து யாரும் மனு…

பா.ஜ தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் மோடி பிரமாண்ட பேரணி

புதுடெல்லி: பா.ஜ தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி நேற்று டெல்லியில் பிரமாண்ட பேரணி நடத்தினார். அவருக்கு பூக்கள் தூவி கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பா.ஜ.வின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. டெல்லி மாநகராட்சி கூட்ட அரங்கில் 2 நாட்கள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள், பா.ஜ. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கட்சியின்…

‘நீ செலக்ட் ஆயிட்டே, ரெடியாயிரு’ என ஆசை காட்டி மோசம் செய்த தேர்வுக்குழு: குமுறுகிறார் சர்பராஸ் கான் | I wasn’t able to sleep says Sarfaraz on India selection snub

‘இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவாய்… வங்கதேச தொடருக்கு ரெடியாக இரு. நீ செலக்ட் ஆயிட்டே’ என்று மும்பை ரன் மெஷின் சர்பராஸ் கானிடம் ஆசை காட்டி அவரைத் தேர்வு செய்யாமலேயே மோசம் செய்துள்ளது இந்திய அணித் தேர்வுக்குழு. இதை தற்போது வெளிப்படையாகக் கூறி குமுறியுள்ளார் சர்பராஸ் கான். சர்பராஸ் கான் 2019/20 ரஞ்சி சீசனில் 998 ரன்கள், சராசரி 154.66. அடுத்த ரஞ்சி சீசனில் 122.75 என்ற சராசரியில் 982 ரன்கள். நடப்பு சீசனில் இதுவரை 801…

தமிழகம் முழுவதும் நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது களைக்கட்டும் காணும் பொங்கல்; கடற்கரை, பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் 15 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அனைத்து  உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும்,  உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளில்  இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2  ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் உற்சாகம் குறைந்திருந்தது. ஆனால் இந்தாண்டு விழா களைகட்டியது. அதிகாலையில் எழுந்து நீராடி  புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு, கரும்பு, மஞ்சள், காய்கறிகள்  உள்ளிட்டவற்றை சூரியனுக்கு…

திமுக வளர்வதை தடுக்க நினைத்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும்: இளைஞர் அணி செயலி தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ‘‘திமுக வளர்வதை தடுக்கவும், எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணி சார்பில், முரசொலி பாசறை, திராவிட மாடல் பயிற்சி பாசறை, இளைஞர் அணி செயலி தொடக்கவிழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். திமுக இளைஞர் அணி செயலியை திமுக தலைவரும்,…

Doctor Vikatan: மெனோபாஸை உறுதிப்படுத்த டெஸ்ட் ஏதாவது உண்டா?

Doctor Vikatan: எனக்கு கடந்த 8 மாதங்களாக பீரியட்ஸ் வருவதில்லை. வயது 49. இதை மெனோபாஸ் என்று எடுத்துக்கொள்ளலாமா? மெனோபாஸ் வந்துவிட்டதை உறுதிப்படுத்த டெஸ்ட் ஏதாவது உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் மெனோபாஸை உறுதிப்படுத்தும் டெஸ்ட் எல்லாப் பெண்களுக்கும் அவசியமில்லை. 50 வயதைக் கடந்த ஒரு பெண்ணுக்கு, தொடர்ந்து ஒரு வருடமாக பீரியட்ஸ் வரவில்லை என்றால் அந்தப் பெண்ணுக்கு மெனோபாஸ் வந்துவிட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.…

‘அழிவை நோக்கி செல்கிறதா ஒருநாள் கிரிக்கெட் போட்டி?’ – அதிர்ச்சியை வெளிப்படுத்திய யுவராஜ் சிங்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அழிவை நோக்கி செல்கிறதா என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகில் 20 ஓவர் போட்டிகள் வருகைக்கு பின்னர், 50 ஓவர் போட்டிகள் கணிசமாக குறையத் தொடங்கியுள்ளன. பந்துக்கு பந்து விறுவிறுப்பு, மழையாய் பொழியும் சிக்சர் பவுண்டரிகள் என டி20 போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு போதையாய் மாறியுள்ளன. தொடக்கத்தில் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது கிரிக்கெட் விளையாடும் பெரும்பாலான நாடுகளில் இதே மாதிரியான…

சமையல் அறையை சுத்தமாக வைக்க ஈஸியான சில டிப்ஸ்!

1. சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் ‘சிங்க்’ எப்போதும் தண்ணீர் படும் இடம் என்பதால், பாசியும் அழுக்கும் படிந்திருக்கும். இதனால், ஒருவித நாற்றமும் கிளம்பும். இதைப் போக்க சிங்க் சுவர்களில், கிளீனரை ஊற்றி நன்றாகத் தேய்த்துக் கழுவவும்.2. அதன் பின் ஒரு நாப்தலின் உருண்டையை சிங்கினுள் போட்டு வைத்தால் கரப்பான் போன்ற பூச்சித் தொல்லையை தவிர்க்க முடியும்.3. சமையல் அறைக் குப்பைக் கூடையை சிங்கிற்கு கீழ் வைக்கலாம். மூடும் வசதியுடைய கூடை நல்லது. இந்தக் குப்பைக் கூடையில்…

1 385 386 387 388 389 419