Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் மாம்பழம், பப்பாளிப்பழம் சாப்பிடலாமா?|Can Preganant lady eat mango, papaya?
அடுத்தபடியாக தவிர்க்க வேண்டிய பழம் அன்னாசி. இதில் புரோமெலின் ( bromelain ) என்கிற என்ஸைம் மிக அதிக அளவில் இருப்பதால் இதுவும் கர்ப்பப்பை சுருங்குவதைத் தூணடக்கூடியது. கர்ப்ப காலத்தில் மிகக்குறைந்த அளவு ஃப்ரெஷ் அன்னாசிப்பழத் துண்டுகளை சாப்பிடுவதில் தவறில்லை. அது அளவை மிஞ்சாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மூன்றாவதாக திராட்சை….. திராட்சைப்பழங்களில் என்ன பிரச்னை என சிலர் யோசிக்கலாம். கர்ப்பகாலத்தில் அளவோடு இவற்றைச் சாப்பிடலாம். ஆனால் திராட்சை விளைவிக்கப்படும்போது சேர்க்கப்படுகிற பூச்சிக்கொல்லிகள்தான் பிரச்னையே… அவை ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். திராட்சை சாப்பிட்டே ஆக வேண்டும்…









