ட்ரோன்களில் ரத்த விநியோகம்… நொய்டாவில் சோதனை முயற்சி; இந்தியா முழுவதும் பயன்பாட்டிற்கு வருமா?| Blood delivery on drones, trial attempt in Noida
வீடியோ கவரேஜ் செய்யப் பயன்படுத்தப்பட்ட வந்த டிரோன்கள், மருத்துவ பயன்பாட்டுக்கும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. சமீப காலங்களில், அவசர தேவைகளின்போது தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை எடுத்துச்செல்ல டிரோன்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது டிரோன்களில் ரத்த மாதிரிகள் எடுத்துச் செல்லப்பட்டு நொய்டாவில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நொய்டாவின் அரசு மருத்துவ அறிவியல் கழகம் (ஜி.ஐ.எம்.எஸ்) மற்றும் லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரி (எல்.ஹெச்.எம்.சி) ஆகியவற்றிலிருந்து 10 யூனிட் ரத்தம் கொண்டு செல்லப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் ஜேபி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியால்…









