`இளமை திரும்புதே…'-வயதாவதை ஒரே வாரத்தில் குறைக்கும் மாத்திரை; ஹார்வர்டு ஆராய்ச்சியாளர்கள் சாதனை!
இளமை என்பது நிரந்தரமல்ல, எல்லோருக்கும் ஒரு நாள் வயதாகும். வயது அதிகரிப்பதையும், முதுமை அடைவதையும் யாராலும் தடுக்க முடியாது.இந்நிலையில், வயதினை ஒரு வாரத்திற்குள்ளாகவே குறைக்கும் ரசாயன மாத்திரையை (chemical cocktail) ஹார்வர்டு மருத்துவ பள்ளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.ஆராய்ச்சி (சித்தரிப்பு படம்) உடல் மற்றும் மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் 5 முதல் 7 மருந்துகளைச் சேர்த்து இந்த ரசாயன மாத்திரையைத் தயாரித்துள்ளனர். மூன்றாண்டுக் கால ஆராய்ச்சியில் எலிகளுக்கும், குரங்குகளுக்கும் இந்த மருந்தினைக் கொடுத்துப் பரிசோதித்துள்ளனர். இதன் மூலம்…








