How to Series: பொடுகுத் தொல்லையிலிருந்து மீள்வது எப்படி? | How To Get Rid Off Dandruff?
சிறுவர்கள், பெரியவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது பொடுகு! குறிப்பாக, இளம் வயதினருக்கு தர்மசங்கடத்தைத் தரும் ஒன்று. இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால், முடி உதிர்வு ஏற்படும்; தலை வழுக்கையாகவும் வாய்ப்பு உண்டு. அதோடு சில சரும நோய்கள் உருவாகவும் இது வழிவகுக்கும். முகத்தில் பருக்கள் உருவாகலாம்; கழுத்திலும், காதின் பின்புறத்திலும் தோல் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்!பொடுகு ஏன் ஏற்படுகிறது?வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற…






