Monthly Archives: June, 2023

வெயிலை சமாளிக்க மட்டுமல்ல.. கோடையில் மோர் குடிக்க இதுவும்தான் காரணம்..!

தினமும் சரியான அளவு மோர் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடல் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். வெப்எம்டி அறிக்கையின்படி, மோரில் ரிபோஃப்ளேவின் எனப்படும் வைட்டமின் பி உள்ளது. இது உங்கள் உடல், ஆற்றலை உற்பத்தி செய்ய உதவுகிறது. நன்றி

இனி சென்னை டூ பெங்களூருக்கு செல்ல 2 மணி நேரம் போதும்… வருகிறது அசத்தல் திட்டம்!

சென்னை – பெங்களூரு இடையே அதிவேக ரயில்களை இயக்கும் வகையிலான ரயில் பாதையை அமைப்பதற்கான ஆய்வு பணிகள் துவங்கவுள்ள நிலையில், இந்த பாதையில் போக்குவரத்து துவங்கினால், சென்னையிலிருந்து, பெங்களூருக்கு இரண்டு மணி மணி நேரத்தில் பயணிக்கலாம்.சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கர்நாடக தலைநகரான பெங்களூரு நகரம். இந்த 2 நகரங்களுக்கு இடையேயான துாரத்தை ரயிலில் கடக்க, தற்போது நான்கரை மணி நேரத்திலிருந்து, ஆறரை மணி நேரம் வரை ஆகிறது. சென்னை – மைசூரு இடையே…

How to: இயற்கை முறையில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி? | How To Gain Weight In Naturally?

என்ன செய்தாலும் உடல் எடையைக் குறைப்பது பெரும்பாடாக உள்ளது என்று புலம்புவோருக்கு மத்தியில், எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடம்பு ஏறவில்லையே என்று ஏங்குபவர்களும் உண்டு. இயற்கையாக, ஆரோக்கியமான முறையில் உடலின் எடையை அதிகரிப்பது எப்படி… அதற்கு என்ன செய்ய வேண்டும்? விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா…டாக்டர் A.B.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர்How to: உணவுகள் மூலம் எலும்புகளை வலுவாக்குவது எப்படி?| How To Increase Bone Strength By Food?உடலின் எடை வரயறை என்பது ஒவ்வொருவருக்கும் அவரின்…

WTC Final : பயிற்சியின்போது கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம்… நாளைய போட்டியில் இடம்பெறுவாரா?

ரோஹித்தின் காயம் தொடர்பாக பிசிசிஐ எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் நாளை அவர் போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நன்றி

`ஆவினில் சிறார் தொழிலாளர்கள்?!’ – சிறார் போராட்டமும் அமைச்சர் சொல்லும் விளக்கமும் | Is TN Aavin appointing children as workers? What is the truth?

சென்னை அம்பத்தூரில் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினில் சிறார்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருப்பதாகப் புகார் கிளம்பியிருக்கிறது. குறிப்பாக, ஐஸ்க்ரீம் பேக்கேஜில் 30-க்கும் மேற்பட்ட சிறார்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் செய்த பணிக்கு ஊதியம் வழங்காததால் போராட்டத்தை நடத்தியதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக விசாரித்தபோது, ’கோடைக்காலத்தில் ஐஸ் விற்பனை அதிகரிக்கும்’ என கணிக்கப்பட்டு அதன் உற்பத்தியை அதிகரிக்க ஆவின் திட்டமிட்டது. இதனால், உற்பத்தியை அதிகரிக்க விடுமுறை நாள்கள் என்பதால் பள்ளிச் சிறார்களைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது. ஆவின்…

`சுவர், கம்பம், கம்பிகள், பெட்டிகள் தாண்டி தாவிக் குதி!' சென்னைக்கு வந்தது பார்க்கூர் விளையாட்டு!

சென்னை ஈக்காட்டுத்தாங்களில், தமிழகத்தின் முதல் பார்க்கூர் (Parkour) வகுப்பை நடத்திவருகிறார்கள் விஷ்வா, விஷால், விக்னேஷ் ஆகிய மூன்று நண்பர்கள். மூவருமே வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள்.முதல் முறையாக விஷ்வா, யூடியூபில் பார்த்துக் கற்றுக்கொண்ட பார்க்கூர் வித்தைகளை, ஒரு பூங்காவில் முயன்றுகொண்டிருக்கும்போது, அங்கு விஷால் வந்துள்ளார். விஷால், விஷ்வாவிடம் தனக்கும் பார்க்கூர் சொல்லிக்கொடுக்கும்படி கேட்க, அந்தப் பூங்காவில் ஒரு சிறிய குழு வார இறுதிகளில் பார்க்கூர் செய்ய ஆரம்பித்தனர். கடைசியாக இவர்களுடன் விக்னேஷும் சேர்ந்து, மூவரும் சென்னையில் பார்கூர் பாட்…

“ IPL -ல் பணம் நிறைய கிடைக்கும்தான், ஆனால் நான் நாட்டுக்காகத்தான் விளையாடுவேன்”- மிட்செல் ஸ்டார்க் |Mitchell Starc comments on skipping IPL

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இவர் விளையாடி இருக்கிறார். அதன்பின் 2018 ஐபிஎல் ஏலத்தின்போது ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9.4 கோடிக்கு வாங்கியது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த முறை ஒரு போட்டியில் கூட  அவர் விளையாடவில்லை. அதன்பின் நடைபெற்ற எந்த ஒரு ஐபிஎல் தொடரிலும் மிட்செல் ஸ்டார்க் பங்கேற்கவில்லை. தொடர்ந்து ஐபிஎல்லை தவிர்த்து வருகிறார்.       மிட்செல் ஸ்டார்க் இந்நிலையில் ஐபிஎல்-லில் ஏன் விளையாடுவதில்லை என்பது  குறித்து மிட்செல் ஸ்டார்க் பேசியிருக்கிறார். இதுகுறித்துப்…

உடல் பலத்தை அதிகரிக்கும் கம கம கருப்பு உளுந்து கிரேவி!

சாதம், குழம்பு, கூட்டு, பொரியல், பாயசம் என்று நாம் செய்யும் எல்லாவிதமான உணவுகளிலும் பெரும்பாலும் பருப்பு சேர்க்கப்படுகிறது. இந்திய சமையலறையில் பருப்புகளுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. பருப்புகளை வெவ்வேறு விதமாக நாம் சமைத்து சாப்பிடலாம். நன்றி

அரிசிக்கொம்பன் யானையை அடிக்கடி இடமாற்றம் செய்வது சரியா? என்ன பாதிப்பு ஏற்படும்?

பட மூலாதாரம், HANDOUTபடக்குறிப்பு, ஊருக்குள் வந்த அரிக்கொம்பன்கட்டுரை தகவல்அரிக்கொம்பன் என்ற அரிசிக் கொம்பன் யானையை இடம் விட்டு மாற்றுவது, மயக்க மருந்து செலுத்துவது போன்றவை உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துமா, வாழ்வியல் சூழலை பாதிக்கும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.கேரளாவில் 35 வயதான அரிசிக் கொம்பன் எனும் ஆண் யானை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இதையடுத்து, இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் வனப்பகுதியில் இருந்து அரிக் கொம்பன் யானையை பெரியார் புலிகள் காப்பகத்தில் உள்ள…

Doctor Vikatan: டீன் ஏஜில் High Bp பாதிப்பு வருமா?

Doctor Vikatan: என் உறவினர் மகனுக்கு 16 வயதுதான் ஆகிறது. உடல் பருமன் பிரச்னையும் இருக்கிறது. அவனைப் பரிசோதித்த மருத்துவர் அவனுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகச் சொல்கிறார். இந்த வயதில் எல்லாம் ஹை பிபி வராது என்று சொல்லிக் கொண்டு அடுத்தகட்ட சிகிச்சை எதுவும் செய்யாமல் இருக்கிறார். உண்மையிலேயே டீன் ஏஜிலும் உயர் ரத்த அழுத்தம் வருமா…. அதற்கு சிகிச்சை அவசியமா…?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். மருத்துவர்…

1 29 30 31 32 33 40