இனி சென்னை டூ பெங்களூருக்கு செல்ல 2 மணி நேரம் போதும்… வருகிறது அசத்தல் திட்டம்!

Share

சென்னை – பெங்களூரு இடையே அதிவேக ரயில்களை இயக்கும் வகையிலான ரயில் பாதையை அமைப்பதற்கான ஆய்வு பணிகள் துவங்கவுள்ள நிலையில், இந்த பாதையில் போக்குவரத்து துவங்கினால், சென்னையிலிருந்து, பெங்களூருக்கு இரண்டு மணி மணி நேரத்தில் பயணிக்கலாம்.

சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கர்நாடக தலைநகரான பெங்களூரு நகரம். இந்த 2 நகரங்களுக்கு இடையேயான துாரத்தை ரயிலில் கடக்க, தற்போது நான்கரை மணி நேரத்திலிருந்து, ஆறரை மணி நேரம் வரை ஆகிறது. சென்னை – மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை, இந்த தொலைவை நான்கரை மணி நேரத்தில் கடக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு அதிவேக ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. அதாவது, இந்த வழித்தடத்தில் அதிவேக ரயில்கள் பயணிப்பதற்காக தனி ரயில் பாதை அமைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக ஆய்வு பணிகளுக்காக தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.  அதன்படி சென்னை – பெங்களூரு இடையே அதிவேக ரயில்களை இயக்கும் வகையிலான ரயில் பாதையை (semi high speed broad gauge line) அமைப்பதற்கான இறுதி மைல் இணைப்புக்கான (Final Location Survey (FLS) ஒப்பந்த புள்ளியை தென்னிந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதன்படி பெங்களூர் பையப்பனஹள்ளி முதல் சென்னை சென்ட்ரல் வரை சுமார் 350 கி.மீ நீளம் கொண்ட இந்த இறுதி மைல் இணைப்பு பாதை ஆய்வுக்காக  ரயில்வே அமைச்சகம் ரூ.8.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒப்பந்தம் கோரும் நிறுவனம்,  வான்வழி லிடார் தொழில்நுட்பத்தை (3டி டிஜிட்டல் மாதிரி) பயன்படுத்தி விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் டெண்டர் எடுத்துள்ள தனியார் நிறுவனம், 3 மாதத்திற்குள் ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யும். இதனை அடுத்து இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

மேலும் முன்மொழியப்பட்ட இந்த ரயில்  பாதையில், ரயிலின் வேகம் மணிக்கு 200 கிமீ ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. 180 கிமீ வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில்கள் தற்போது 130 கிமீ வேகத்தில் மட்டுமே இயக்கப்படுகின்றன. இருப்பினும், புதிய ரயில் பாதையின் மூலம், வந்தே பாரத் ரயில்கள் முழு திறனுடன் இயங்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கரூ.600 கோடிக்கு ஒப்பந்தம்.. கோவை பழமுதிர் நிலையத்தின் 70% பங்குகளை வாங்கும் முன்னணி தனியார் நிறுவனம்.!

கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம்,  மைசூரு மற்றும் சென்னை சென்ட்ரல் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்டது.  இந்த ரயில் மூலம், சென்ட்ரல் – மைசூரு  ரயில் பயணத்தை 4 மணி 25 நிமிடங்களில் கடந்து செல்லலாம். மிதமான அதி வேக ரயில்  பாதையின் மூலம் இந்த நேரத்தை 2 மணி நேரத்துக்கள் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com