`உங்க காபியில உப்பு இருக்கா..? ட்ரெண்டாகும் காபியில் உப்பு சேர்த்து குடிக்கும் வழக்கம்; என்ன காரணம்?| People adding salt to their coffees, here is the reason why?
ஸ்வீடன் மக்கள் காபியில் உப்பு சேர்க்கப்பட்ட சீஸ் அல்லது பன்றி இறைச்சியைச் சேர்த்துப் பருகி வந்தனர். இரண்டாம் உலகப் போரின்போது உப்புநீரைப் பிரித்தெடுக்கும் கருவிகள் முழுமையாகப் பலனளிக்காததால், அமெரிக்க கடற்படைப் பணியாளர்கள் உப்பு கலந்த காபியைக் குடித்தனர்.இதுபோல ஹங்கேரி, ஸ்காண்டிநேவிய நாடுகள், சைபீரியா, துருக்கி போன்ற நாடுகளிலும் நீண்ட காலமாகவே காபியில் உப்பைச் சேர்த்து குடிக்கும் வழக்கம் இருந்துள்ளது.2009-ல் உணவு ஆராய்ச்சியாளரும் சமையல்கலை வல்லுநருமான அல்டன் பிரௌன் என்பவர், காபியில் சிட்டிகை அளவு உப்பு சேர்த்த எபிசோட்,…









