தஞ்சாவூரில் ஃபேமஸான சாந்தி பரோட்டா கடைக்கு தற்போதும் குறையாத மவுசு… இங்க அப்படி என்ன ஸ்பெஷல்?
தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் மாவட்டங்களில் ஒன்றாக தஞ்சாவூர் மாவட்டம் திகழ்ந்து வருகிறது. அதற்கு காரணம் உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில், அரண்மனை, மணிமண்டபம் என பல வரலாற்று சிறப்புகள் வாய்ந்த இடங்கள் இங்கு உள்ளது தான்.இவ்வளவு வரலாற்று சிறப்புகள் வாய்ந்த இவ்வூரில் பரோட்டாவிற்கு ஃபேமசாக கீழவாசல் பகுதியில் அமைந்துள்ளது 40 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சாந்தி பரோட்டா கடை. 80ஸ் கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை அனைவரையும் தனித்தன்மையான ருசியால் வெகுவாக கவர்ந்துள்ளது…








