பணவீக்கம், விலைவாசி உயர்வு பற்றி பேசாமல் தவிர்க்க நாடாளுமன்ற நடவடிக்கைகளை பாரதிய ஜனதா முடக்குகிறது: முகுல் வாஸ்னிக் குற்றச்சாட்டு
சென்னை: பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அவைகளை குறித்து பேசாமல் தவிர்க்க நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆளும் கட்சியான பாஜ முடக்குகிறது என முகுல் வாஸ்னிக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்நிக் நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதாக கூறுகின்றனர். ஆனால் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவது ஆளும் கட்சியான பாஜ தான். பணவீக்கம், விலைவாசி உயர்வு பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவை குறித்து பேசாமல் தவிர்க்கின்றனர்.ராகுல்…