கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கலாசாரம் கற்பிக்கப்படும்… ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிரடி அறிவிப்பு
ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சம்வர்த்தினி நியாஸ், `கர்ப்ப சன்ஸ்கார்’ என்ற பெயரில் ஒரு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கலாசாரம் மற்றும் பழைமைவாதத்தைக் கற்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி ஜவஹர்லால் தேசிய பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணக்கப்பட்ட நிகழ்வில் இந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.ஆர்.எஸ்.எஸ்இந்தப் பிரசாரத்தில், ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்களுடன் இணைந்து செயல்பட உள்ளனர். இவர்கள், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சியுடன், கருவில் இருக்கும் குழந்தைக்கு கீதை, ராமாயணம் பயிற்றுவிப்பார்கள். இந்தத்…








