Monthly Archives: February, 2023

வட மாநில தொழிலாளர்களை கண்காணிக்க: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: வேலை தேடி தமிழகத்திற்கு வரும் வட மாநில தொழிலாளர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பெரும்பாலும் நடைபெறும் கொள்ளை சம்பவங்களில் வட மாநிலத்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு வரும் வட மாநில தொழிலாளர்களை தமிழக அரசும், காவல்துறையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இங்குள்ள வட மாநில தொழிலாளர்கள் மீது குற்ற வழக்குகள் ஏதாவது பதிவு…

Vikatan Specials – 14 February 2023 – Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் தலைவலி… மாத்திரை எடுத்தால் குழந்தைக்கு பாதிப்பு வருமா? | doctor vikatan – Headache during pregnancy – taking pills will affect the baby

இவை தவிர சைனஸ் பிரச்னை, மூளையில் உள்ள ரத்தக் கட்டி, இதய பாதிப்புகள், மூளையில் ஏற்படும் தொற்றுநோய் போன்றவற்றாலும் தலைவலி வரலாம். எனவே, கர்ப்பகாலத்தில் தலைவலி வந்தால், முதலில் அதற்கான காரணத்தை மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடித்து சிகிச்சை எடுக்க வேண்டும். செகண்டரி தலைவலிக்கான காரணங்களில் ஏதேனும் இருப்பது தெரிந்தால் அதற்கான சிகிச்சை எடுக்கப்பட வேண்டும்.கர்ப்பத்துக்கு முன்பும் தலைவலி பாதிப்பு இருந்து, அது கர்ப்பத்திலும் தொடர்கிறது என்ற நிலையில், பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். தலைவலியைத் தூண்டும் உணவுகளைத் தவிர்க்க…

“குழந்தைகள் அன்பை வெளிப்படுத்தும் விதம் அற்புதம்” – ரசிகர்கள் அனுப்பிய வாழ்த்து அட்டைகளை பகிர்ந்த பந்த் | way kids express love amazing rishabh pant shares valentines day greets by fans

புது டெல்லி: காதலர் தினத்தை முன்னிட்டு இளம் ரசிகர்கள் தனக்கு பகிர்ந்த வாழ்த்து அட்டைகளை பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த். அதில் குழந்தைகள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதம் அற்புதம் என சொல்லியுள்ளார் பந்த். கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கிய பந்த் தற்போது ஓய்வில் உள்ளார். அவர் களம் திரும்ப எப்படியும் சில காலம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவருக்கு மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அவருக்கு…

குமரி: விசாரணைக்குச் சென்ற போலீஸார்மீது தாக்குதல், சட்டைக் கிழிப்பு; 3 பெண்கள் கைது – என்ன நடந்தது? | three arrested for attacked police officials during the investigation in kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனந்த நாடார் பகுதியில் வசிப்பவர் அய்யாவு. கூலிவேலை செய்துவருகிறார். இவர் தன் மனைவி, மகன் பார்த்தசாரதி, இரண்ட மகள்களுடன் வசித்துவருகிறார். அய்யாவுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த தமிழ்ச்செல்வன் என்பவரது குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. நேற்று தமிழ்ச்செல்வன் வீட்டினருக்கும் அய்யாவின் குடும்பத்தினருக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து தமிழ்ச்செல்வனின் மனைவி மல்குஜா ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம்.! இன்று மாலை கே.எஸ்.அழகிரி வாக்கு சேகரிக்கிறார்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று மாலை பிரசாரம் மேற்கொள்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக தேர்தல் பணிக்குழுவில் உள்ள 32 திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்குச் சேகரிப்பில்…

Vikatan Specials – 14 February 2023 – Doctor Vikatan: வேலையை பாதிக்கும் அளவுக்கு தலைவலி… பெயின் கில்லரால் சமாளிப்பது சரியா? | doctor vikatan – A headache that interferes with work… is it okay to treat it with a pain killer?

சிலருக்கு 50 வயது வரை தலைவலி வந்திருக்காது. 50 வயதுக்குப் பிறகு திடீரென அடிக்கடி தலைவலி வருகிறது என்றாலும் அவசியம் நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும். இன்னொரு வகை தலைவலி உண்டு. `இடி விழுந்தது போன்ற தலைவலி’ என்பார்கள். அதை Thunderclap headache என்கிறோம். அதாவது தலை வலிக்க ஆரம்பித்த ஒரு நிமிடத்தில் அது உச்சத்தை அடைந்திருக்கும். அது மிக மிக ஆபத்தான தலைவலி. ஒரு நொடிகூட தாமதிக்காமல் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய பிரச்னை இது.…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டிலும் ஷ்ரேயாஸ் பங்கேற்க வாய்ப்பில்லை… மாற்று வீரர் யார்?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முதல் போட்டியில் பங்கேற்காமல் இருந்த நிலையில் 2ஆவது போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக முதல் போட்டியில் விளையாடிய சூர்ய குமார் யாதவ் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில், 2ஆவது டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன்…

வெறும் தேங்காய் – சர்க்கரை இருந்தா போதும் சூப்பரான இனிப்பு பூரி செய்யலாம்.!

பூரி பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பூரிக்கு மேலும் சுவை கூட்டும் விதமாக, சர்க்கரை – தேங்காய் சேர்த்து ஒரு வித்தியாசமான சுவையில்இனிப்பு பூரி சுடுவது எப்படி என பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :கோதுமை மாவு – 2 கப்.ஏலக்காய் – 3.சர்க்கரை – 1 கப்.ரவை – 1 கப்.தேங்காய் – அரை மூடி.எண்ணெய் – தேவையான அளவு.உப்பு – தேவையான அளவு.செய்முறை :> பூரி செய்வதற்கு முன்…

விவசாயிகளை அழ வைக்கும் அழகிய சின்னஞ்சிறு பறவைகள் – என்ன நடக்கிறது?

டார்கஸ் வாங்கிராபிபிசி நியூஸ்10 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் குஜராத் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர் என்ற செய்தியை நாம் கேள்விப்பட்டுள்ளோம். அதேபோல, கென்யாவில் சிட்டுக் குருவியை போன்ற பறவை ஒன்று நெல் பயிரிடும் விவசாயிகளை ஆட்டிப் படைத்து வருகிறது. கென்யாவின் மேற்கு பகுதியில் கிசுமு என்ற நகரில் க்விலியா என்ற சிவப்பு நிற அலகு கொண்ட சின்னஞ்சிறு பறவைகள் படையெடுத்து அறுவடையை கேள்விக்குறியாக்கியுள்ளது.”இந்த பறவைகளை விரட்ட நான் கத்தி கத்தி எனது…

77 வேட்பாளர்களுக்காக கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் என பிரிக்கப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தமுள்ள 238 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 286 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 286 கட்டுப்பாட்டுக் கருவிகள், 310 விவிபேட் இயந்திரங்கள் ஏற்கனவே தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்போது, 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. எனவே கூடுதலாக…

1 29 30 31 32 33 61