சங்கரன்கோவிலில் வாடிக்கையாளர்களை கவரும் மூலிகை சூப் கடை! டேஸ்ட்டுக்கான சீக்ரெட் இதுதான்..
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கனரா பேங்க் அருகே சூப் கடை வைத்திருக்கிறார் வேல்சாமி. மூலிகை கொண்டு இவர் செய்யும் பல வகையான சூப் மற்றும் பாரம்பரிய உணவு ரகங்களுக்கு இந்த பகுதி மக்கள் அடிமை என்றே கூறலாம். இதுகுறித்து சூப் கடை நடத்தும் வேல்சாமி கூறுகையில், “10 வருடத்திற்கு மேலாக டவரில் வேலை செய்து வந்தேன். ஒரு கடையில் சூப் வாங்கி குடித்தேன். திடீரென எனது உடல் ஆரோக்கியமாக மாறியது. இதுகுறித்து அந்த கடைக்காரிடம் கேட்டு சூப் வைக்க கற்றுக்கொண்டேன்.…









