எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்ள எஜமானார்கள் மோடி, அமித்ஷாவுக்கு தான் உண்மையாக இருக்கிறார்.! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை
ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஓபிஎஸ் விரைவில் மாநில ஆளுநராகிவிடுவார். எடப்பாடி பழனிசாமி விரைவில் பாஜக தலைவராகி விடுவார். எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதல்வர் ஆனார் என்பதை மறந்து விட்டு ஈரோட்டில் பேசி வருகிறார். சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற்ற பழனிசாமிக்கு மீசையை பற்றி பேச அருகதை இல்லை. எடப்பாடி பழனிசாமி யாருக்காவது உண்மையாக இருந்திருக்கிறாரா?…









