Daily Archives: February 18, 2023

தமிழகத்தில் அதிகரிக்கும் வெவ்வேறு வகை காய்ச்சல் பரவல்… மருத்துவர் தரும் விளக்கம்! | Different types of fever are increasing in Tamil Nadu.

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் வெவ்வேறு வகையான காய்ச்சல் பரவல் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. சளி, காய்ச்சல், இருமல் போன்ற பல்வேறு அறிகுறிகள், மக்கள் மத்தியில் பரவலாகத் தென்படுகின்றன. பலரும் பரிசோதிக்க முன்வராத நிலையில், இது கோவிட் தொற்றின் அறிகுறியா, சிக்கன் குனியா காய்ச்சலா அல்லது சாதாரண காய்ச்சலா என்ற சந்தேகம் எழுகிறது. திடீரென காய்ச்சல் பரவலுக்கான காரணம் என்ன…மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கலாம் என்பது பற்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜனிடம் கேட்டோம்……

கால்பந்து போட்டி பார்க்க அனுமதி மறுப்பு… வன்முறையாக மாறிய ரசிகர்கள் போராட்டம்… கண்ணீர் புகை குண்டு வீச்சு..!

இந்தோனேசியாவில் மத்திய ஜாவா பகுதியில் செமராங் அணிக்கும், பெர்சிஸ் சோலோ அணிக்கும் இடையேயான கால்பந்துப் போட்டி நடைபெற்றது. டெர்பி போட்டிக்கான அரங்கத்தில் அமர்ந்து பார்க்கும் அளவிலான டிக்கெட்டுகள் மட்டும் விற்கப்பட்டன. மற்றவர்களை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டது.அக்டோபரில் மலாங்கில் நடந்த போட்டியில் 135 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும்  பாதுகாப்புக் காரணங்களுக்காக பார்வையாளர்களைத் தடை செய்ய போலீஸார் வியாழக்கிழமை முடிவு செய்ததாக மாகாண ஆளுநர் கூறினார்.  விளையாட்டை காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,…

வறட்டு இருமல், சளி வராமல் இருக்க இதை தினமும் குழந்தைகளுக்கு கொடுங்கள்…!

கோடைக்காலம் வந்தும் பனி பொழிந்துக் கொண்டிருப்பதால் இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி, இருமலால் மிகுந்த கஷ்ட்டப்படுகிறார்கள்.அவர்கள் மஞ்சள் மிளகு பாலைத் செய்து குடித்து வந்தால், சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம். சிலர் இதெல்லாம் ஓர் ரெசிபியா என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் பலருக்கு மஞ்சள் மிளகு பாலை சரியான விகித முறையில் செய்யத் தெரியாது. இதை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்:பால் -…

குழந்தையை பிரசவித்த கையோடு பிகாரில் பொதுத் தேர்வு எழுதிய இளம்பெண் – குவியும் பாராட்டுகள்

43 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், VISHNU NARAYAN பிகாரில் உள்ள பங்கா மாவட்டத்தில் வாழும் ஒரு பெண்ணுடைய தைரியம், தன்னம்பிக்கையின் கதை தற்போது பேசுபொருள் ஆகியுள்ளது. சமீப நாட்களில் பிகாரில் 10ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற்றன. அதில் பங்கெடுத்தவர்களில் 22 வயதான ருக்மிணியும் ஒருவர்.ருக்மிணி திருமணம் ஆவதற்கு முன்பாகத் தனது சொந்த ஊரான கட்டோரியில் படித்துக் கொண்டிருந்தார். பிறகு திருமணமாகி, அங்கிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பைல்வா என்ற கிராமத்தில் இருக்கும் கணவர் வீட்டிற்குக் குடிபெயர்ந்துவிட்டார்.அதனால்,…

அதானியின் அசுர வளர்ச்சிக்கு மோடியின் ஆதரவே காரணம் பாஜவின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறுவதை யாராலும் தடுக்க முடியாது: தெலங்கானா முன்னாள் காங்கிரஸ் தலைவர் பேட்டி

சென்னை: தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் உத்தம் குமார் ரெட்டி சென்னை சத்தியமூர்த்திபவனுக்கு நேற்று வந்தார். அவருக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர்கள் சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், ரஞ்சன் குமார் மற்றும் நிர்வாகிகள் ஜெயம் ஜெ.கக்கன், ரஞ்சித்குமார் உள்பட பலர் அவரை வரவேற்றனர்.அப்போது, உத்தம் குமார் ரெட்டி கூறியதாவது: பல ஆண்டுகளாக அமலாக்கப்பிரிவு,…

டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட ஆக்‌ஷன் ஹீரோ புரூஸ் வில்லிஸ்… அறிக்கை வெளிட்ட குடும்பத்தினர்!| American action hero Bruce Willis diagnosed with dementia

அதில், “2022 வசந்த காலத்தில், புரூஸ் அஃபேசியா (Aphasia) எனும் நிலையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தோம். (அஃபேசியாவால் பாதிக்கப்படுகையில், பேசவும் எழுதவும், மற்றவர் பேசுவதைப் புரிந்துகொள்ளவும் முடியாது). இதை அறிவித்ததில் இருந்து அவரின் நிலை மோசமடைந்தது. தற்போது அவர் `ஃப்ரன்டோடெம்போரல் டிமென்ஷியா’ (frontotemporal dementia) என்ற மறதி நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார். இதனால் மூளையில் ஆளுமை, நடத்தை மற்றும் மொழி ஆகியவற்றைக் கையாளும் பகுதிகள் பாதிக்கப்படும்.இந்நோயின் அறிகுறிகளில் ஒன்றான பிறரோடு `தகவல் தொடர்பு’ கொள்ளும் சவால்களை புரூஸ் எதிர்கொள்கிறார்.…

IND v AUS: புஜாராவின் 100வது போட்டி, அஷ்வின் – ஜடேஜாவின் இமாலய சாதனைகள்; முதல் நாள் ஆட்டம் எப்படி?

பார்டர் – கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியிருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவான் என்று கருதப்படும் புஜாராவுக்கு இந்தப் போட்டி ஒரு மைல்கல். இந்தப் போட்டிதான் அவருக்கு 100ஆவது டெஸ்ட் போட்டி.ஆஸ்திரேலியா அணியில் சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குனமான் தனது அறிமுகப் போட்டியில் களமிறங்கியிருந்தார். போட்டி தொடங்குவதற்கு முன் புஜாராவுக்கு சுனில் கவாஸ்கர் நினைவுப் பரிசு ஒன்றை வழங்கி கௌரவப்படுத்தினார். புஜாரா, எப்போதும் போல் அடக்கமாக, “உங்களைப்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,788,478 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.88 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,788,478 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 678,367,359 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 650,940,754 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,913 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

சொல்லிட்டாங்க…

* 12 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு பாஜ அரசு தீங்கு விளைவித்துள்ளது. – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே* ஜனநாயக நாட்டில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவதே பெரும் மதிப்பு ஆகும். – மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே* பிரதமர் மோடியின் ‘இந்து ராஷ்டிரா’ மகாத்மா காந்தியின் கொள்கைக்கு எதிரானது. இதை முன்னிறுத்துவதன் மூலம் பாஜ இந்தியாவை அழிக்க முயல்கிறது. – பீகார் முதல்வர் நிதிஷ்குமார்* தமிழ்நாடு அரசே பருத்தியை…

வழுக்கை தலையை காரணம் காட்டி பணி நீக்கம்; நிறுவனத்திற்கு ரூ.71 லட்சம் அபராதம்! |Man fired from company for being bald, court order to gives 71,000 pounds

ஏதேதோ மழுப்பல் காரணங்களைக் கூறி, நிறுவனம் அவரை வெளியேற்ற முயற்சி செய்தது. அநீதி தாளாமல் தன்னுடைய உயர் பதவியை ராஜினாமா செய்தார், ஜோன்ஸ். தன்னுடைய ராஜினாமா கடிதத்தில், `என்னை மோசமாகக் காட்டுவதற்காக அற்ப அரசியலும், சதியும் நடந்துள்ளது. என்னைக் குறித்துக் குறை கூறும் அறிக்கையில், அப்பட்டமான பொய்கள் இருப்பது குறித்து வருந்தினேன்’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.அதோடு வழுக்கைத் தலையைக் காரணம் காட்டி, வேலையில் இருந்து தன்னை நீக்கிய நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.இந்த வழக்கை விசாரித்த…