Daily Archives: February 12, 2023

Doctor Vikatan: எத்தனை நாள்களுக்கு ஒருமுறை அசைவ உணவுகள் சாப்பிடலாம்?| Doctor Vikatan: How many days can you eat non-vegetarian food?

Doctor Vikatan: என் வயது 59. எத்தனை நாள்களுக்கு ஒரு முறை அசைவ உணவுகள் சாப்பிடலாம்? அசைவத்தில் எப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிட வேண்டும்… எத்தனை நாள்களுக்கொரு முறை பிரியாணி சாப்பிடலாம்?Abdul Rasheed, விகடன் இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.ஸ்ரீமதி வெங்கட்ராமன்வயதைக் குறிப்பிட்டுள்ள நீங்கள், உங்கள் உயரம் மற்றும் எடையைக் குறிப்பிடவில்லை. ஆணோ, பெண்ணோ ஒருவருக்கு வயிற்றுப் பகுதியைச் சுற்றி (அப்டாமினல் ஒபிசிட்டி) கொழுப்பு அதிகமிருந்தால், இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்…

டேபிள் டென்னிஸில் யஷஸ்வினி சாம்பியன் | Yashaswini Ghorpade champion in table tennis

சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான 84-வது இளையோர் மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது நாளான நேற்று யு-19 மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கர்நாடகாவின் யஷஸ்வினி கோர்படே 11-8, 11-9, 7-11, 8-11, 13-11, 11-9 என்ற செட் கணக்கில் ஹரியாணாவின் சுகானா சைனியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். யு-19 மகளிர் இரட்டையர் பிரிவில் டெல்லியின் லக்சிதா நரங், அவிஷா…

ராமநாதபுரம்: வீடு புகுந்து வாலிபர் வெட்டிக் கொலை; முன்விரோதம் காரணமா? – போலீஸ் விசாரணை

ராமநாதபுரம், காட்டு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் மகன் பக்கா என்ற பிரபுதேவா (28). இவர்மீது ராமநாதபுரத்திலுள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. இந்த நிலையில், நேற்று அதிகாலை வீட்டில் தலையில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிரபுதேவா இறந்துகிடந்திருக்கிறார்.கொலைசெய்யப்பட்ட பிரபுதேவாபிரபுதேவாவின் தாய் நேற்று முன்தினம் இரவு அவர் உறவினரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு, நேற்று காலை வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது வீடு திறந்து கிடந்திருக்கிறது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, மகன் வெட்டிக்…

புதுவையில் கோடிக்கணக்கில் கனிமவள கொள்ளை நடக்கிறது: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுவையில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு கனிமவள கொள்ளை நடக்கிறது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி: புதுச்சேரிக்கும் அதானிக்கும் கூட தொடர்பு இருக்கிறது. காரைக்கால் துறைமுக நிறுவனம் கடனாக வாங்கிய பணத்தை கட்டாதததால் ஏலத்துக்கு வந்தது. அதனை வாங்குவதற்கு அதானி முயற்சி செய்தார். அதானி நேரடியாக வாங்காமல், சக்திவேல் என்ற பினாமி மூலம் வாங்கியுள்ளார்.அதன்பிறகு அதானி குடும்ப பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. எல்லா ஊழலும்…

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மோசமான ரிக்கார்டை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய அணி…

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மோசமான ரிக்கார்டை நாக்பூர் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா படுதோல்வியை சந்தித்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 177 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களும் எடுத்தது. இந்த 91 ரன்கள் இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி எடுத்த மிகக் குறைவான ஸ்கோர் ஆகும். முன்னதாக, 2004-05-ல் மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 93…

சோறு வடித்த கஞ்சி தண்ணீரில் இவ்வளவு விஷயங்கள் செய்யலாமா..? இனிமேல் கீழே உற்ற வேண்டாம்..!

சலவை செய்ய பயன்படுத்தலாம் : ஆடைகளை சலவை செய்து உடுத்தும்போது, அவை மடமடவென்று இருப்பதை பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக வெள்ளை வேட்டி, சட்டை, பிளைன் சட்டை, கதர் ஆடைகள் போன்றவற்றை அணிபவர்கள் இத்தகைய அனுபவத்தை விரும்புகின்றனர். ஆக உங்கள் ஆடைகளை துவைத்த பிறகு, அவற்றை இந்த கஞ்சித் தண்ணீரில் நனைத்து, பிழிந்து காய வைத்தால் போதுமானது. எதிர்பார்த்த மடமடப்பு கிடைக்கும். நன்றி

துருக்கி நிலநடுக்கம் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் பெயர்களை அழித்தது எப்படி?

டாம் பேட்மேன்பிபிசி நியூஸ், அடனா, தெற்கு துருக்கி6 மணி நேரங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, முகத்தில் மோசமாக சிராய்ப்பு ஏற்பட்ட இந்த ஆறு மாதக் குழந்தை கையில் கட்டப்பட்டுள்ள அடையாளம் தெரியாத குழந்தை என்ற அடையாம் மூலமே அறியப்படுகிறது. துருக்கி, சிரியாவில் ஏற்பட்டிருக்கும் பயங்கரமான நிலநடுக்கத்தால் அங்கே மிகவும் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. பேரிடரில் தங்களது பெற்றோர்களை இழந்த பச்சிளம் குழந்தைகள் பலர் தங்களது பெயர் கூட தெரியாமல் நிர்கதியாக நிற்கின்றனர். இப்படி பெயர் தெரியாத சில குழந்தைகளின்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணிக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் ஆதரவு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், திமுக கூட்டணி கட்சிக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்க மாநில தலைவர் சேம.நாராயணன் எழுதியுள்ள கடிதம்: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக கூட்டணி கட்சிக்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் குலாலர் சங்கம் முழு ஆதரவை அளிக்கும். மேலும், இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் குலாலர் சங்கம் சார்பாக…