INDvSL: அணியின் அச்சாணியாக சதமடித்து நொறுக்கிய விராட் கோலி; வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!
இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வெற்றிகரமாகத் தொடங்கியிருக்கிறது இந்திய அணி.Rohit டாஸை இழந்ததோ முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதோ “Blessing in disguise” என்பது போல் இந்தியாவிற்குச் சாதகமாகவே இருந்தது. டாஸின் போது ரோஹித் கூறியதைப் போல, அடிப்படை விஷயங்களை சரியாகச் செய்வது மட்டுமல்ல வித்தியாசமான அணுகுமுறையும் கடினமான சூழ்நிலைகளும் முன்னர் எட்டாத உயரங்களை எட்ட வைக்கும். எனவே இரண்டாவது பாதியில் பனிப்பொழிவு என்னும் சவாலை…









