Daily Archives: January 26, 2023

INDvNZ: `ஒன் ஒன் நம்பர் ஒன்’ தரவரிசையில் முதலிடம்; நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி! INDIA vs NEW ZEALAND 3rd ODI match- review.

386 ரன்களை இலக்காகக் கொண்டு ஆலன்- கான்வே இணை களமிறங்கியது. ஆனால், நியூசிலாந்துக்கு ஆரம்பமே சரியில்லை. முதல் ஒவரை ஹர்திக் வீச, ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஆலன் டக்-அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். பிறகு, நிக்கோல்ஸ் – கான்வே இணை, நிதானித்து ஆடினர். பிறகு, 6 ஓவர் முடிவில் 36/1 என ஸ்கோர் செய்தது. பிறகு, நிக்கோலஸ் அதிரடிகாட்ட, கான்வேயும் அதிரடியாக ஆடத்தொடங்கினர். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் வரத் தொடங்கி, ஸ்கோரும் உயரத் தொடங்கியது. 9 ஓவர் முடிவில் 68/1…

60 நிமிடங்கள் போதும்… 5 வகையான தென்னிந்திய உணவுகளின் ரெசிபீஸ்..

தமிழ் கலாச்சாரத்தில் உணவே மருந்து என்றொரு பழமொழி உண்டு. ஏனென்றால் இங்கு உணவுகளில் மூலிகைகள் மற்றும் வாசனை பொருட்கள் நேரடியாக சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. நன்றி

விழுப்புரம்: அரசுப் பள்ளி வாசலில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு; சொத்து பிரச்னை காரணமா? | Govt school teacher brutally attacked in Villupuram police investigation goes on

அப்போது, பள்ளியின் வாயில் அருகே வந்த அவரின் அண்ணன் ஸ்டாலின், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு நடராஜின் கையிலும், முதுகிலும் வெட்டியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவர்கள் சிலர், அவர்களை தடுக்க முயன்றுள்ளனர். அப்போது 3 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வெட்டுக் காயமடைந்த ஆசிரியரை மீட்ட சக ஆசிரியர்கள், அவரை உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தகவலின் பேரில் பள்ளிக்கு வந்த வளவனூர் காவல்துறை அதிகாரிகள்,…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ச.ம.க. போட்டியும் இல்லை யாருக்கும் ஆதரவு இல்லை: சரத்குமார் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், சமக போட்டியும் இல்லை, எந்த கட்சிக்கும் ஆதரவும் அளிக்கப்போவது இல்லை என்று சரத்குமார் அறிவித்துள்ளார்.சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சமத்துவ மக்கள் கட்சி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து, சென்னை தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும், உயர்மட்டக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசித்து, முழுமையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் சமத்துவ…

WIPL 2023 முதல் சீசனில் 5 அணிகள் – அகமதாபாத் அணியை அதிக தொகைக்கு வாங்கியது அதானி குழுமம் | wipl 2023 five teams in inaugural season adani bought ahmedabad for high bid

மும்பை: முதல் மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்று விளையாடும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மிகமுக்கிய தருணமாக அமைந்துள்ளது. அகமதாபாத் அணியை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் வாங்கியுள்ளது அதானி குழுமம். மும்பை, பெங்களூரு, டெல்லி, லக்னோ மற்றும் அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு முதல் சீசன் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகளை ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்தியா’வின்…

மோதி குறித்த பிபிசி ஆவணப்படத்தை புதுவை பல்கலைக்கழகத்தில் திரையிட மறுப்பு: செல்போன், லேப்டாப்பில் பார்த்த மாணவர்கள்

6 மணி நேரங்களுக்கு முன்னர்இந்திய பிரதமர் மோதி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை புதுவை பல்கலைக்கழகத்தில் திரையிட அனுமதி மறுத்த நிலையில், மாணவர்கள் அவர்களது தொலைபேசி மற்றும் லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்து பார்த்தனர். பாதுகாப்பு கருதி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள புதுவை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. பி.பி.சி.யின் ‘இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ (India: The Modi question) ஆவண படம்…

இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அணிகளில் ஓபிஎஸ்சுக்கு தனியரசு ஆதரவு: பொதுச்செயலாளராக வந்தால் அதிமுகவுக்கு ஆபத்து

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனி அணிகளாகக் களமிறங்குகின்றனர். இந்த சூழ்நிலையில், அதிமுக கூட்டணியில் 2 முறை எம்எல்ஏவாக வெற்றிபெற்றவர் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு. இவர், கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு நேற்று வந்து தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் வெளியில் வந்த…