IND vs SL 2வது ODI | கே.எல்.ராகுல் பொறுப்பான ஆட்டம்: இலங்கைக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா | kl rahul played with responsibility india won odi series against sri lanka
கொல்கத்தா: இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியை இந்திய கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என வென்றுள்ளது இந்தியா. இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் பொறுப்புடன் பேட் செய்து அணியை வெற்றி பெற செய்தார். இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த அணி டி20 தொடரை 1-2 என்ற…









