அதிமுக தலைவர்கள் ஒன்றிணைப்பு; சமரச திட்டத்திற்கு எடப்பாடி எதிர்ப்பு: முடிவு எடுக்க முடியாமல் திணறும் பாஜக..!
சென்னை: அதிமுக தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பாஜக கொடுத்த நெருக்கடிக்கு எடப்பாடி எதிர்ப்பு தெரிவிப்பதோடு, மறுத்து வருகிறார். அவர் சரணடையாததால் முடிவு எடுக்க முடியாமல் டெல்லி தலைவர்கள் திணறி வருகின்றனர். தமிழக அரசியலில் திமுக, அதிமுக மட்டுமே செல்வாக்கு பெற்ற கட்சிகளாக உள்ளன. தேசிய கட்சிகள் ஓரளவு செல்வாக்குடன் இருந்தாலும் கிராம அளவில் அக்கட்சிகளுக்கு பலம் இல்லை. இதனால் திராவிட கட்சிகளை சார்ந்துதான் தேசிய கட்சிகள் செயல்பட வேண்டிய சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது. அதில் அதிமுக…









