“தேனியில் அனைவரும் எடப்பாடிக்கே ஆதரவு; அவரே ஒற்றைத் தலைமை ஏற்பார்!” – ஜக்கையன் உறுதி | jakkaiyan press meet about admk single leadership issue
தேனி மாவட்ட அ.தி.மு.க-வினர் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் உள்ள நூறு சதவிகித அ.தி.மு.க-வினரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. இதில் எவ்வித குழப்பமும் இல்லை. எவ்வித சட்டச்சிக்கலும் இல்லை. வரும் 11-ம் தேதி பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும். அந்தப் பொதுக்குழுவில் அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படுவார். எடப்பாடி பழனிசாமி விரைவில் தலைமைப்பொறுப்பை ஏற்பார்” என்றார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சோலைராஜ், முன்னாள் கம்பம் ஒன்றியச் செயலாளர் இளையநம்பி, மற்றும்…








