Yearly Archives: 2022

போண்டா மணியிடம் உதவி செய்வது போல் நடித்து பணம் திருடிய பலே திருடன் கைது

சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் போண்டாமணியிடம் ரசிகர் என்று கூறி, திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி என்ற ஊரை சேர்ந்த ராஜேஷ் பிரித்தீவ்(34) என்பவர் உடல் நலம் விசாரிப்பது போல உடன் பழகி மருத்துவமனையில் போண்டா மணிக்கு உதவிகளையும் செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து போண்டா மணி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தார்.  அவருடன் ராஜேஷ் பிரித்தீவ்வும் உடன் வந்துள்ளார். அப்போது போண்டா மணியின் மனைவி…

திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக கிளை கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பேரூர் கழகம் மற்றும் மாநகர வட்ட கழக தேர்தல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஒன்றிய, நகர, மாநகர பகுதிகளுக்கான தேர்தலும், பின்னர் மாநகர கழகங்களுக்கான தேர்தலும் நடைபெற்று முடிந்தது.இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்,…

மலையேறும் போது அதிகரிக்கும் மூச்சுத்திணறல், மாரடைப்பு, மரணம்… தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? | What should be done to avoid suffocation, heart attack and death while climbing a mountain?

அடிப்படையில் நமது இதயம் மற்றும் நுரையீரலின் தாங்கும் திறனைப் பொறுத்துதான் இது போன்ற மரணங்கள் நிகழ்கின்றன. இதயத்துக்கு அதிகப்படியான அழுத்ததைக் கொடுக்கும்போது மாரடைப்பு ஏற்படும். டிரெட்மில்லில்  15 நிமிடங்கள் ஓடினால்தான் அதற்குரித்தான பலன் கிடைக்கும். அதுவே, நம் அதீத ஆர்வத்தால் 45 நிமிடங்கள் ஓடினோம் என்றால் அது இதயத்துக்கு கொடுக்கும் அழுத்தம் மாரடைப்பை ஏற்படுத்தி விடும். இது போன்று இறக்கிறவர்களுக்கு மது, புகைப்பழக்கம் இருந்தாக வேண்டும் என்றில்லை. எந்தப் பழக்கங்களும் இல்லாதவர்களுக்குக்கூட இது போன்று மரணம் சம்பவிக்கும். திரைப்பட…

த்ரில் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா – News18 Tamil

லக்னோவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.லக்னோவில்  நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக போட்டி தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி 40…

make 15 minutes instant sambar recipe

கிட்சன் பக்கம் சென்றாலே வேலை சீக்கிரம் முடிந்துவிட வேண்டும் என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால் அன்றைய நாள் முழுவதும் கிட்சனில் நின்றாலும் வேலை ஓயாது. இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க சில குறுக்கு வழிகள், டிப்ஸ், ஹேக்ஸ் தெரிந்து வைத்துக்கொள்வது அவ்வபோது உதவலாம். அந்த வகையில் நொடியில் சாம்பார் வைக்க உங்களுக்கு கற்றுத்தருகிறோம். ரெசிபி இதோ…தேவையான பொருட்கள்துவரம் பருப்பு – 1 கப் சின்ன வெங்காயம் – 7 மஞ்சள் – 1/2 tsp தண்ணீர் – 2…

6 மாத கைக் குழந்தையுடன் மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு வருகை..!!

ராமநாதபுரம்: 6 மாத கைக் குழந்தையுடன் மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு வருகை தந்துள்ளனர். 2 நாட்களாக தனுஷ்கோடி அடுத்த மணல்திட்டில் தவித்த இலங்கை தமிழர்கள் 5 பேரை மரைன் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 174ஆக உயர்ந்துள்ளது. Source link

நடைபயணமாக செல்லும் கேரள இளைஞர் மெக்காவை அடைய ஒன்றிய அரசு உதவ வேண்டும்: முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை:  தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஷிஹாப் சித்தூர் என்ற 29 வயது இஸ்லாமிய இளைஞர் சவுதியில் உள்ள மக்காவிற்கு புனித நடைபயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இந்த இளைஞர் நடைபயணமாகவே ஹஜ் செல்ல ஜூன் 2ம் தேதி கேரளாவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தொடங்கினார். வங்கதேசம் வழியாக பாகிஸ்தானை நெருங்கியிருக்கும் ஷிஹாப் சித்தூர் ஹஜ் நடைபயணத்திற்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.…

Doctor Vikatan: ஹேர் டை உபயோகிப்பதால் ஏற்படும் கண் எரிச்சல் – அலர்ஜியிலிருந்து விடுபட வழி உண்டா? | Doctor Vikatan – Eye irritation due to using hair dye

அலர்ஜியை கட்டுப்படுத்த மிக பாதுகாப்பான, பக்க விளைவுகளை ஏற்படுத்தாத மருந்துகளை மாத்திரைகளாக எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல அலர்ஜியால் கண்களில் எரிச்சலும் அரிப்பும் இருந்தால், அதற்கான டிராப்ஸ் பயன்படுத்தலாம். மருத்துவரின் பரிந்துரையோடு Anti histamine டிராப்ஸ் பயன்படுத்தலாம்.கண்களில் எரிச்சலும் வீக்கமும் அதிகமாகி, கண்கள் வீங்கி, பொங்கினால், மருத்துவரின் ஆலோசனையோடு ஸ்டீராய்டு கலந்த ஐ டிராப்ஸ் பயன்படுத்தலாம். ஆனால் இந்த டிராப்ஸை குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் உபயோகித்தால் க்ளாக்கோமா எனப்படும் கண் அழுத்த நோயும், நோய் எதிர்ப்பாற்றல் குறைவதால் நோய்த்தொற்று…

Sarfaraz Khan: ரெட் பால் கிரிக்கெட்டின் அடுத்த சர்ப்ரைஸா சர்ஃபராஸ்? ஜாம்பவான்களைத் தொடும் சாதனைகள்! | The rise of Sarfaraz Khan in the domestic arena

சரி, எந்த இடத்தில் சர்ஃபராஸ் முன்னிலும் மெருகேறியிருக்கிறார் என்று பார்த்தால் முன்பை விட அவரது பாசறையில் உள்ள ஷாட்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. முன்னதாக அவரிடம் வகைக்கொன்றாக இத்தனை ஷாட்கள் வராது. பிஹைண்ட் த ஸ்கோரில் ஸ்கோர் செய்வார், கவர் டிரைவ்கள் கண்ணைக் கவரும் அவ்வளவுதான். ஆனால், இப்போது, ரெட்பால் கிரிக்கெட்டின் சூர்யக்குமார் யாதவாக, 360 டிகிரி கோணத்திற்கும் பந்துகளைப் பறக்க விடுகிறார். ராம்ப் ஷாட், ஸ்ட்ரெய்ட் டிரைவ், கட் ஷாட் என வரிசைகட்டுவதோடு, ஸ்பின்னர்களுக்கு எதிராக அற்புதமாக…

மணல் திருட்டு தொடர்பாக புகார் அளித்ததால் ஆத்திரம்… ஆ.டி.ஐ ஆர்வலருக்கு நேர்ந்த கொடூரம்!

குஜராத் மாநிலத்தில், ஆர்.டி.ஐ ஆர்வலரும் அவரின் மகனும் சென்ற ஸ்கூட்டர்மீது, சட்டவிரோத மணல் அகழ்வில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் கார் மோதியதில், ஆர்.டி.ஐ ஆர்வலரின் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்.டி.ஐ ஆர்வலர் ரமேஷ் பாலியா என்றும் அவரின் மகன் நரேந்திரன் என்றும் தெரியவந்திருக்கிறது. இவர்கள் லக்பத் தாலுகாவில் உள்ள மேக்பர் கிராமத்தில் வசித்துவருகின்றனர். அதோடு, ரமேஷ் பாலியா உள்ளூர் பட்டியலின தலைவராகவும் அறியப்படுகிறார்.மணல் குவாரிஇதில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர் நவல்சிங் ஜடேஜா என்பவர்மீது ரமேஷ்…

1 172 173 174 175 176 510