2கே கிட்ஸும் ஈஸியாக செய்யலாம்; தீபாவளி லேகியம் எளிமையான செய்முறை! |#DeepavaliRecipe
தீபாவளி நெருங்கிவிட்டதால் கடைவீதிகள் எல்லாம் களைகட்டி இருந்தன. மக்கள் கூட்டம் ஜவுளிகளை வாங்க, கடைகளை மொய்த்துக் கொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் சிக்கி அவதிப்படாமல் இருக்க, முன்பே பர்சேஸ் செய்துவிட்ட திருப்தியில் இருந்த சுபிக்ஷா, பிரதோஷம் என்பதால் சிவன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்ப தயாராக இருந்தார்.கோயிலில், தற்செயலாக சுசீலா ஆன்ட்டியை பார்த்த சுபிக்ஷா, “என்ன ஆன்ட்டி! தீபாவளி பர்சேஸ் ஆயிடுச்சா?” என்று கேட்டார். “இல்லம்மா! நாளைக்குத்தான் டி. நகர் போகணும். நீ தீபாவளி ஜவுளி எடுத்துட்டியா?” என்று…








