FIFA WC 2022 | அட்டகாசமான மேட்ச்… செர்பியாவை வீழ்த்தி நாக் – அவுட் சுற்றில் சுவிட்சர்லாந்து! | FIFA WC 2022 | Stupendous match.. Switzerland beats Serbia to step into knock out round
கத்தார் உலகக்கோப்பை ஏற்கெனவே பல அற்புதமான போட்டிகளை முதல் சுற்றிலேயே கண்டு விட்டது, இன்று அதிகாலை நடந்த சுவிட்ஸர்லாந்து-செர்பியா மேட்ச் முத்தாய்ப்பான ஒரு போட்டியாக அமைந்தது. இதில் சுவிட்சர்லாந்து அணி செர்பியாவை 3-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி வென்று இறுதி-16 சுற்றுக்குத் தகுதி பெற்று அங்கு போர்ச்சுகலைச் சந்திக்கின்றது. அங்குதான் போர்ச்சுகலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் காத்திருக்கிறது. 20-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ஹெர்தான் ஷகீரி முதல் கோலை அடிக்க 26வது நிமிடத்தில் செர்பியா வீரர் அலெக்சாண்டர்…









