ஜிஎஸ்டி போட்டது ஒன்றிய அரசு தான் பால் விலையை குறைக்க சொல்வது வேடிக்கை: அண்ணாமலையின் டிவிட்டர் பதிவுக்கு கண்டனங்கள் எழுகிறது
சென்னை: பால் விலையை குறைக்க சொல்வது வேடிக்கையாக உள்ளது என்று அண்ணாமலையின் டிவிட்டர் பதிவுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஆவின் பால்விலை உயர்வு தொடர்பாக பாஜ தலைவர் அண்ணாமலை ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். ‘‘பொறுப்பற்ற முறையில் பொய்களை சொல்லாமல் பால் விலை உயர்வை, திரும்ப பெற வேண்டும்’’ என கூறியிருந்தார். இதற்கு தமிழக பால் வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், ‘‘ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி.யை பாலுக்கு கூட போட்டாங்க. இதுவரை வரலாற்றில் இல்லாத ஒரு நிகழ்வு. பாலுக்கு…









